Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th August 2018 14:52:10 Hours

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொல்காவெல மக்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

பொல்காவெல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் (14) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை ஏற்பட்ட சூறாவளி நிமித்தம் அப்பிரதேசம் பாரிய சேத்திற்கு உள்ளாகியது.

ஏகல்ல, ரத்மல்ஹொட, இம்புல்ஹொட, கெபலிட்டிவல, குளுகென்டிவல, வாதவ போன்ற பிரதேசங்களில் உள்ள 48 வீடுகள், பாடசாலை மற்றும் எழு வியாபார நிலையங்கள் சேதத்திற்கு உள்ளாகியிருந்தன.

அத்துடன் அப் பிரதேசங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்துகள் ஸ்தம்பிதமாயிருந்தது. பின்னர் இராணுவத்திலுள்ள 65 படையினரது பங்களிப்புடன் அப்பிரதேசத்திலுள்ள மரங்கள் அகற்றி போக்குவரத்துகள் வழமைக்கு கொண்டு வரப்பட்டன.

மேலும் அப்பிரதேசத்தில் சிரமதான பணிகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய 143 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் டீ.எம்.பி.டீ திசாநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் 1 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பி.எம்.பி கொஸ்தா அவர்களது தலைமையில் இராணுவத்தினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Running sports | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger