Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2018 21:35:26 Hours

பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

பாகிஸ்தான் உயரதிகாரி உட்பட ஜந்து பேரைக் கொண்ட இராணுவ அதிகாரிகள் இராணுவ தளபதியின் அழைப்பையேற்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

இவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை (10) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பின் போது இராணுவ படைக் கலச் சிறப்பணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டீ.டி கமகே, படைக்கலச் சிறப்பணியின் பிரிக்கட் தளபதி சமன் சில்வா அவர்களும் இணைந்திருந்தனர்.

மேஜர் ஜெனரல் ரெஹான் அப்துல் பாகி, கேர்னல் ஒமர் நாசிர், கேர்னல் ஜவேத் அலி, ஊழியர் சாஜன்ட் (நயாக் சுபேதார்) முகம்மது ஈரேக், கோர்ரல் (ஹவல்தார்) முகமது ஆசிப் ஷகிர் ஆகியோர் இந்த விஜயத்தினை மேற்கொண்டனர். இவர்கள் (4) ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.

பின்னர் இவர்கள் இராணுவ படைக் கலச் சிறப்பணி தலைமையகம், கெலத்தேவையிலுள்ள படைக்கலச் பயிற்சி நிலையம், கொக்காவில் மற்றும் திருகோணமலைக்கு சுற்றுலாவை மேற்கொண்டனர். Adidas shoes | Nike Air Max 270