Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2018 14:59:48 Hours

சாஜன் ஹெட்டியாரச்சி ஈட்டி எரியும் போட்டியில் சாதனை

விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த எச்.ஏ.சி.எஸ் சாஜன் ஹெட்டியாரச்சி அவர்கள் ஈட்டி எரியும் போட்டிகளில் கலந்து கொண்டு உலக சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

தேசிய 2018 ஆம் ஆண்டிற்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் கொழும்பு சுகததாஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (21) ஆம் திகதி இடம்பெற்றபோது இந்த விளையாட்டு வீரர் 62.11 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

கடந்த நாட்களில் 59.82 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து உலக சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டியில் 40 விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த 800 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

சாம்பியன்ஷிப் போட்டியில் 180 க்கும் அதிகமான தடகள மற்றும் பரா விளையாட்டு வீரர்களின் திறன்களைக் காட்டுமுகமாக நிகழ்வில் அதிக பங்கேற்பு ஊக்குவிக்கும், அந்த பாரா விளையாட்டு வீரர்களுக்கு தார்மீக ஊக்கத்தை வழங்கும் முகமாக அமைந்திருந்தது.

இந்த போட்டிகளில் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் எதிர்வரும் ஆசிய பரா விளையாட்டுக்கள் உட்பட, இந்த சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்குபெறும் திறன் கொண்ட வீரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் அங்கவீனமுற்றோருக்கான நீண்டகால பங்காளியான டயலொக் ஆக்ஸியாட்ட பி.எல்.சி உடன் இணைந்து விளையாட்டு அமைச்சின் ஆதரவின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. bridgemedia | Shop: Nike