Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2018 13:59:48 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் கடலோர பாதுகாப்புத் திட்டத்தின் இணையாக 200 தெங்கு கன்றுகள் நடும் நிகழவு

யாழ் மாவட்ட செயலகம் மற்றும் வடக்கு வேளாண்மை துறை திணைக்களத்தினரால் கடலோர பாதுகாப்புத் துறை திணைக்கழத்தின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மயிலிட்டி கடலோர பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கத்துடன் 200 தெங்கு கன்றுகள் நடும் நிகழ்வு (18) ஆம் திகதி புதன் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டமானது யாழ் பHதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் ஆலோசனையின் படி ஏற்பாடு செய்யப்பட்டு கடல் கரை பாதுகாப்பை தடுக்கும் நிமித்தம் இது வரையிலும் 2000 ஆயிரம் நடப்பட்டுள்ளது. அதற்கு மேலாக யாழ் தீபகற்பகத்தில் பொது மக்கள் 100 பேருக்கு பொருளாதாரத்தை மேம் படுத்தும் நோக்கத்தில் அதிகளவில் கன்றுகள் பகிர்தளிக்கப்பட்டனர்.

மேலும் இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய கடந்த வருடங்களில் இலங்கை இராணுவத்தில் இணைந்த சிப்பாய வீரர்களின் சேவையின் நிமித்தம் 20,000 க்கும் அதிகமான கன்றுகள் பகிர்தளிக்கப்பட்டனர்.

அதேபோல் இக் கன்றுகள் பகிர்தளிக்கும் நிகழ்விற்கு அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையங்கள் படைப் பரிவுகளுக்கும் அறிவுறத்தல்கள் வழங்கப்பட்டனர்.

அதன் படி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் மயிலிட்டி பிரதேசத்தின் 515 ஆவது படைப் பரிவின் அதிகாரிகள் மற்றும் படையினரால் இக் கன்றுகள் நடும் நிகழ்வுகள் மேற் கொள்ளப்பட்டது.

அதேபோல் கரையோரப் பாதுகாப்புத் திட்டத்திட்கு பங்களிப்பு வழங்கிய பல அரசாங்க அதிகாரிகள் பலரும் இன் நிகழ்வில் பங்கு பெற்றனர்.

இந் நிகழ்விற்கு யாழ் மாவட்ட செயலாளர் (இடம்) எஸ் முரலிதரன் அவர்களும் தெல்லிப் பலை பிரதேசத்தின் செயலாளர எஸ் சிவ ஸ்ரீ அவர்களும் கடலோர பாதுகாப்புத் துறை திணைக்கழத்தின் உறுப்பினர்களும் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டனர்.

Sports Shoes | Nike Shoes