Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th July 2018 21:19:18 Hours

ஐ.நா ஆசிய பசிபிக் அரசியல் விவகார துறை குழுவினர் இராணுவ தளபதியை சந்திப்பு

நியூயோர்கில் உள்ள ஐக்கிய நாட;டு அரசியல் விவகார துறையின் ஆசிய-பசிபிக் பிரிவின் பணிப்பாளர் திருமதி மாரி யமஷிடா அவர்கள் (16) ஆம் திகதி திங்கட் கிழமை மதியம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து இராணுவ நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இந்த உரையாடலின் இராணுவத்தின் பல சமூக சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை முன்னேற்றத்தை பற்றி விளக்கினார். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட சிவிலியன்களின் நலன்களுக்காக அந்தந்த பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் படி இராணுவ தளபதியவர்களிடன் ஐ.நா. அரசியல் விவகார துறையின் ஆசிய பசிபிக் பிரிவின் பணிப்பாளர் திருமதி மாரி யமஷிடா அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் ஐ நா அமைதிகாக்கும் படையினர்களின் அமைதி காக்கும் பணிகளில் செயல் திறன்கள் மற்றும் அவைகளை சரியான முறையில் கையாள்வது எப்படி என்றும் அதற்கு தேவையான நடைமுறைகளை கவனிக்க வேண்டும் என்றும் திருமதி மாரி யமஷிடா அவர்கள் உறுதிமொழியிட்டார்> மேலும் இந்த சந்திப்பில் இராணுவ பாதுகாப்பு மற்றும் போருக்குப் பிந்தைய காலத்தில் முரண்பாடுகள் நிறைந்த முயற்சிகளை அதிகரிப்பதற்காக இராணுவத்தின் பங்களிப்புகளையும் பொறுப்புகள் பற்றியும் கலந்துறையாடினர்.

இச்சந்திப்பின் முடிவில் இராணுவ தளபதியவர்களால் திருமதி.மாரி யமஷிடாவிற்கு அடையாளச் சின்னமான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன் இது நிகழ்விற்கு அடையாளமாக இருந்தது. மேலும் இராணுவ தலைமையகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் சிறப்பு விருந்தினர்களுக்கான புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

அவர்களுடன் ஐ.நா. பிரதிநிதி மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Adidas shoes | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp