Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2018 15:32:30 Hours

முதல் தடவையாக முப்படையினர் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் போத்ஹயாவிற்கு புனித யாத்திரை

முப்படை மற்றும் அவர்களது அங்கத்தவர்களது பங்களிப்புடன் மொத்தமாக 160 பேர் அவர்களில் இலங்கை இராணுவம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 82 பேர் வாழ்நாளில் முதன்முறையாக இந்தியாவிலுள்ள போத்ஹயாவிக்கு புனித யாத்திரை நிமித்தம் நேற்றைய தினம் சென்றனர்.

இவர்களை நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் நேனாநாயக மற்றும் இந்திய உயர் ஸ்தானி அதிகாரிகள் இவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இந்தியாவின் உயர் ஸ்தானிகரின் நெருங்கிய ஒத்துழைப்புடன் இந்தியா-இலங்கை பரிமாற்ற திட்டத்தின் கீழ் இந்த முப்படையைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு மூன்று நான் புனித யாத்திரை 24 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு தங்குமிட வசதிகள், உணவுகள் மற்றும் போக்குவர வசதிகள் இந்திய இராணுவ பிரதானியின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஆணையாளர் தாரிஜித் சிங் சந்து ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இவர்களுக்கு விசா வழங்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து வந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இவர்கள் இந்த புனித யாத்திரையை மேற்கொண்டனர்.

அன்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானிஜெனரல் பிபின் ராவட் மற்றும் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கலந்துரையாடலின் நிமித்தம் இந்த நல்லெண்ண புனித யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டன.

jordan release date | Men's Footwear