Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2018 16:43:39 Hours

அமெரிக்க இராணுவ கெடெற் அதிகாரிகள் இலேசாயுத காலாட் படைத் தலைமையகத்திற்கு வருகை

அமெரிக்க இராணுவத்தின் கெடெற் அதிகாரிகள் 11 பேர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டனர். அச்சமயத்தில் இவர்கள் (24) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

இங்கு வருகை தந்த அமெரிக்க கெடெற் அதிகாரிகளை இலேசாயுத காலாட் படையணியின் பிரதி கட்டளை தளபதி கேர்ணல் அநுர திசாநாயக அவர்கள் வரவேற்று இலேசாயுத காலாட் படையின் ஆயுத நூதனசாலை, நினைவு தூபிகள் அனைத்தையும் காண்பித்து விளக்கங்களையும் தெரிவித்தார்.

வரலாற்று உண்மைகளை பார்வையிடவும், பிரிவினைவாத பயங்கரவாதத்தை அழிக்கவும், மீள்குடியேற்றம், இடமாற்றம், மீள்குடியமர்வு, முதலியவற்றிற்காகவும் தனது கடந்தகால அனுபவங்கள், அதன் போர்க்கள ஆதாயங்கள், மூலோபாய அணுகுமுறைகள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வதற்கும், பயங்கரவாதத்தை ஒழித்தது தொடர்பான இராணுவ கற்கை நெறிகளை தெரிந்து கொள்வதற்காக இலேசாயுத காலாட் படையணிக்கு வருகையை மேற்கொண்டனர்.

மேலும் இந்த அமெரிக்க கெடெற் அதிகாரிகளுக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையின் கேர்ணல் எம்.ஜி.ஏ மஹதுவாகார, கேர்ணல் எஸ்.டி உதயசேன, லெப்டினன்ட் கேர்ணல் ஜி.ஏ.டி.கே.ஜி கனகொட, லெப்டின ன்ட் கேர்ணல் டப்ள்யூ.கே.எஸ்.பி.எம்.ஆர்.ஏ.பீ தொடம்வல்ல, மேஜர் எச்.என்.எம்.பீ குணரத்ன மற்றும் எச்.ஏ.ஜே ஆரச்சி அவர்களை விரிவுரைகளை முன்வைத்தனர்.

பின்னர் இந்த அதிகாரிகள் இலேசாயுத காலாட்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற பகல் விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

buy shoes | Nike Running