Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2018 16:10:58 Hours

நைஜீரியா இராணுவ பிரதிநிதிகள் யாழ் விஜயம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது மகளீர் படையணி தலைமையகத்திற்கு இந்த நைஜீரியா இராணுவ பிரதிநிதிகள் மே மாதம் 22 – 23 ஆம் திகதிகளில் விஜயத்தை மேற்கொண்டனர்.

நைஜீரியாவின் இராணுவ மகளீர் படையணியை வலுவடையச் செய்யும் நோக்கத்துடன் இலங்கைக்கு வருகை தந்த நைஜீரியா இராணுவ பிரதிநிதிகள் அவர்களது தேவைகள் நிமித்தம் கடந்த தினங்களில் இராணுவ தலைமையகத்தில் இராணுவ பிரதானிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர்.

அதன் இரண்டாம் கட்டமாக இவர்கள் யாழ் குடாநாட்டிற்கும் வருகை தந்து யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளுடன் நைஜீரியா இராணுவ மகளீர் படையணியை வலுவடையச் செய்வதற்கான அறிவுறுத்தல்களை இலங்கை இராணுவத்தினரிடம் கற்றுக் கொண்டனர்.

நைஜீரியா இராணுவத்தின் பிரதிநிதிகளான பிரிகேடியர் ஜெனரல் பி.பீ பெக்ரோகா, கேர்ணல் ஜே.ஓ ஆ, மேஜர் என்.எச் லொங்போ மற்றும் மேஜர் ஜே.டி அஞ்சா அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.

bridgemedia | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE