Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th May 2018 16:18:53 Hours

இஸ்லாம் ஆன்மீக அமைப்பினால் அவயங்களை இழந்த முப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் சக்கர நாற்காலிகள் நன்கொடை

அனைத்து இனங்களுக்குகிடையில் ஒற்றுமையை மேம்படுத்தும் நிமித்தம் சமுதாயத்தின் கவனம் மற்றும் ஒற்றுமை தேவை என்பதை கருத்தில் கொண்டு முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ், பொதுமக்களுக்கும் 110 சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வானது (05) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றதோடு இந் நிகழ்விற்கு இஸ்லாம் ஆன்மீக அமைப்பு நிறுவனத்தின் எம்.சீ.ஏ ஹமட் ஹாஜியார் அறக்கட்டளை (M. C. A Hameed Hajiyar Trust) அவர்களின் அழைப்பை ஏற்று இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் கலந்த கொண்டார்.

நிதி தலைவரான எம்.சீ.ஏ ஹமிட் ஹாஜியார் அவர்களின் அழைப்பை ஏற்று இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக இராணுவ தளபதி அவர்கள கலந்து கொண்டதோடு மத பூஜைகள் மற்றும் இஸ்லாமியர்களிடையே காணப்பட்ட உயர் மட்ட மத மரியாதை பிரதிபலிக்கப்பட்டதுடன் கொழும்பு காலி முகதிடல் பசுமை வளாகத்தில் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நன் கொடை வழங்கும் நிகழ்வானது 5 ஆவது ஆண்டாக நாடு பூராகவுள்ள இராணுவம் பொலிஸ் மற்றும் பிரதேச செயலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விசேட கவனத்தின் பின் அவயங்களை இழந்த முப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுவர்களுக்கும் இந்த சக்கர நாற்காலிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

நிதி தலைவரான எம்.சீ.ஏ ஹமிட் ஹாஜியார் அவர்களின் விசுவாசம் நல்லென்னத்தின் நோக்கம் சுல்தானுலே அரிபின், சையிஹூல் முப்லிஹின் எம்.எஸ்.எம் அப்துல்லா அவர்களினால் ஒவ்வெறு வருடமும் ஜூலி மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை உலர் உணவு பொருட்கள் வழங்கப்படும். இந் இஸ்லாம் ஆன்மீக அமைப்பு நிறுவனமானது மட்டகளப்பு மாவட்டத்தில் ஆரயம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ளது.

இந் நிகழ்வின் நோக்கம் அனைவருக்கும் நித்திய ஜீவனைப் பற்றிக் கற்றுக்கொள்வதும் சமாதானத்தையும் அமைதியையும் பெற்றுக் கொள்வது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான குறிக்கோள் ஆகும்.

இந் நிகழ்விற்காக 231 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹெல்ல மற்றும் சட்ட நடவடிக்கை பணிப்பாளர் ஏடிவடி ஜயசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

bridgemedia | Nike Air Max 270