Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th April 2018 14:32:52 Hours

இராணுவ தளபதி தமது தாய்ப் படையணியான மத்தேகொடைக்கு விஜயம்

மலர்ந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் புத்தாண்டு தினமான (ஏப்ரல் 14ஆம் திகதி) மத்தேகொடையில் அமைந்துள்ள அவரது தாய்ப் படையணியான 5ஆவது பகுதி இலங்கை இயந்திர படையணிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இராணுவ தளபதியவர்கள் படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு திருவிழாவில் கலந்து கொண்டார். இவர் இரண்டாவது லெப்டினென்னானக இப் படையணியில் கடைமையின் பின் இப் படையணியிற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியவர்கள் படைத் தலைமையகத்தில் அனைத்து படையினரது பங்களிப்புடன் நல்ல சுப நேரத்தில் பால்பொங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

மத்தேகொடையில் அமைந்துள்ள அவரது தாய்ப் படையணியான 5ஆவது பகுதி இலங்கை இயந்திர படையணியில் விஷேட படையணியும் இணைந்துள்ளதுடன் வருகையை மேற்கொண்ட இராணுவ தளபதியவர்களை மிகவும் அன்பாக இப் பொறியியல் படைத் தலைமையகத்தினரால் வரவேற்கப்பட்டதோடு. இப் பொறியியல் படைத் தலைமையகத்திற்கு வருகையை மேற்கொண்ட இராணுவ தளபதியவர்களால் தனது வீட்டிற்கு வந்ததாகவும் இங்கு பாரம்பரியம் காணப்படுவதாகவும் இந்த இடத்தில் முதல் முறையாக தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். புத்தாண்டு நிகழ்வை எங்கள் நாட்டில் கொண்டாட வேண்டும் என்று படையினர்களுடன் கலந்துரையாடினர்.

இந்த தலைமையகத்திற்க வருகை தந்த இராணுவ தளபதியவர்களை பொறியியலாளர் பிரதானி மேஜர் ஜெனரல் டட்லி வீரமன் அவர்கள் வரவேற்றார். அவருடன் பொது பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் தனஞ்சித் கருணாரத்ன அவர்களும் இணைந்திருந்தார்.

இந்த தலைமையகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்விற்கு இராணுவ தளபதி பிரதம அதிதியாக வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து மதியபோசன விருந்தோம்பலில் இராணுவ தளபதி இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்விற்கு படையணியின் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்களும் இணைந்திருந்தனர். அத்துடன் படையணியின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு விழாவின் முடிவில் இராணுவ தளபதி மற்றும் பல சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் பங்கு பற்றிய வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நெத் எஃப்எம் புத்தாண்டு நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பியது.

Sport media | NIKE