Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th April 2018 11:42:14 Hours

ராகமை ரணவிருசெவனவிற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதியவர்கள்

பலவாறான வேலைப்பழுவின் மத்தியிலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதுவருடத்தை முன்னிட்டு ராகமை ரணவிருசெவனவில் அங்கவீனமுற்ற 120 இராணுவ வீரர்களுக்கான புதுவருட பரிசுப் பொதிகளை வழங்கி வைக்கும் நோக்கில் கடந்த வியாழக் கிழமை (05) அவர் இவ்விடத்திற்கு தமது பயணத்தை மே;றகொண்டார்.

ஆந்த வகையில் இராணுவத் தளபததியவர்கள் தமது கடமைப் பொறுப்பின் பிற்பாடு ரணவிரு செவனவிற்கான பயணத்தை மேற்கொண்டது இதுவே முதல் தடவையாகும்.

இவ் ரணவிரு செவனவிற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை சக்கர நாற்காலியைக் கொண்ட அங்கவீனமுற்ற படையினர் வரவேற்றதுடன் இராணுவ சுகாதார சேவைகளின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மீள் குடியேற்ற பணிப்பாளரான பிரிகேடியர் சாந்த திருநாவூக்கரசு மற்றும் ராகமை ரணவிருசெவனவின் தளபதியான பிரிகேடியர் ஹேமந்த குலதுங்க போன்றௌறும் கலந்து கொண்டு இராணுவத் தளபதியவர்களை வரவேற்றனர்.

ஆந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இப் படையினருடான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் நான்கு வாட்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு புத்தாண்டுப் பரிசில்களை வழங்கி வைத்தார்.

மேலும் இராணுவத் தளபதியவர்கள் நிர்வாக மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பான கலந்துரையாடலை குடியேற்ற பணிப்பாளரான பிரிகேடியர் சாந்த திருநாவூக்கரசு மற்றும் ராகமை ரணவிருசெவனவின் தளபதியான பிரிகேடியர் ஹேமந்த குலதுங்க போன்றௌரிடம் மேற்கொண்டார்.

சில நிமிடங்களின் பின்னர் இராணுவத் தளபதியவர்கள் இராணுவப் பொறியியலாளர்ப் படையினரால் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டடங்கள் மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்படுகின்ற கால்கள் தொடர்பான கருத்தரங்கை பார்வையிட்டார்.

ஆதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியவர்கள் ரணவிரு செவனவில் சேவையாற்றுகின்ற அதிகாரிகள் அனைவருடனான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

மேலும் இந் நிகழ்வில் தனியார் நிறுவாகப் பணிப்பகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் தேவிந்த பெரேரா மற்றும் ராகமை ரணவிரு செவனவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் லக்மிணி ரணசிங்க போன்றௌரும் கலந்து கொண்டனர்.

Sports Shoes | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp