Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2018 12:38:27 Hours

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதியின் பங்களிப்புடன் பிங்கிரிய கட்டிட நிர்மாண பணிகள்

இராணுவ நிபுணத்துவமான, பொறியியல், மெக்கானிக்கல், மின் மற்றும் கட்டிடத் துறைகளில் புதிய கலை படைப்புடன் மீண்டும் ஒருமுறை பிரம்மாண்ட வரவேற்பை பெற்றும் இராணுவம் மீண்டும் புதிய கலைப்படைப்பு மண்டபம் (தர்மசாலாவ) மற்றும் தேவகிரி ரஜ மகா விகாரையில் அருகிலுள்ள கட்டடிட நிர்வாக பணிகளை குறைந்த செலவில் மேற் கொண்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு பிங்கிரியவில் நடைப்பெற இருக்கும் தேசிய வேசக் தினத்தை முன்னிட்டு புத்தசாசனத்தில் நடைப்பெறும் பூஜைகளுக்காக இந்த நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆதற்கமைய (26) ஆம் திகதி திங்கட் கிழமை பிங்கிரிய கட்டுமான பகுதிக்கு பயணத்தை மேற் கொண்ட இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் தற்போது நடைபெற்று வரும் செயல்திட்டத்தின் முன்னேற்றத்தையும்,அதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அனைத்து பொறியியல் படையினர்களுடன் இந்த நிர்மாண பணிகள் சம்பந்தமாக கலந்துரையாடல் செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த விகாரையின் பௌத்த தேர்ரான மல்லகன அத்தடஸி நயாக தேரர் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் 532ஆவது படைப்பரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக்க ஜயசுந்தர மற்றும் 143ஆவது படைப்பரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் பாலித்த பெரேரா மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

இக் கட்டிடமானது இராணுவ மதிப்பீட்டின்படி இரு நிர்மாணங்களும் 40 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. 142 அடி நீளமும் 68 அடி அகலமும் கொண்ட புதிய பிரசங்கக் கூடம் ஒரே நேரத்தில் 1000 பக்தர்களை வசதியாகக் ஒன்று கூடவதற்கும் வசதிகளுடன் நிர்மானிக்கப்படடுள்ளது. அதோடு புதிய நிர்வாகம் மற்றும் நூலக கட்டிடம் 60 அடி நீளமும் 32 அடி அகலமும் கொண்டதhகும்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14ஆவது படைப்பிரிவின் 143ஆவது படைப்பிரிவினர் தேசிய வெசாக் தினத்திற்கு முன்று மாதங்களுக்கு முன் இந்த நிர்மாண பணிகளை மேற் கொண்டார்கள்.

இந்த வருடம் தேசிய வெசாக் திருவிழாவில் பிங்கிரிய தேவகிரி ரஜ மகா விகாரையானது முதல் இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்விற்கு ஏற்ப தேசிய வெசாக் தினம் தொடங்குவதற்கு முன்பாக, வளாகத்தில் தொடர்ச்சியான சீரமைப்பு திட்டங்கள் மற்றும் அதனுடன் இணைந்து மாநில அரசாங்கங்களும் ஒருங்கிணைந்து நிர்மாண பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இக்கட்டுமானப் பணியானது இந்த விகரையின் பௌத் தேரரான மல்லகன அத்தடஸி நயாக தேரர் அவர்களின் ஆலோசனைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14ஆவது படைப்பிரிவின் 143ஆவது படைப்பிரிவின பொறியியலாளர்களினால் இக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளில் 1ஆவது பொறியியளாலர் படையினர், விஜயபாகு காலாட் படையினர் மற்றும் இலங்கை தேசிய காவற் படையினர்களின் ஒத்துழைப்புடன் இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வடமேல் மாகாண குருநாகல் மாவட்டத்திலுள்ள பிங்கிரிய தேவகிரிய ரஜமகா விகாரையானது இலங்கையில் மிகவும் பழமையான பௌத்த கோவில்களில் ஒன்றாகும். இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ளது. கி.மு. தேவாநம்பியதிஸ்ஸ அரசர் ஆட்ச்சி காலத்தில் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வர்த்தகர்களால் முதன்முதலில் இப் புனிதமான இடத்தை கட்டியெழுப்பியதாக வரலாறு செல்லப்படுகின்றன. பின்னர், ஆக்போ (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) மேற்கு நோக்கி இரண்டு அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டது மூன்று கல் புத்த சிலைகள் மற்றும் ஸ்ருபாவின் கிழக்கே ஒரு சிறிய மண்டபமும் கட்டப்பட்டு இருந்தது.

affiliate tracking url | Women's Nike Air Max 270 trainers - Latest Releases