Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th March 2018 10:10:30 Hours

இனத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இராணுவத்தினர் ஹிங்ராகொட ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகள் ஆரம்பம்

பொலன்னறுவை மாவட்டத்தில், மின்னேரிய, ஹிங்ராகொட பிரதேசத்தில் விவசாயத்திற்கு பயண்படுத்தும் ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகளில் 100 இராணுவத்தினர் , முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினரது ஒத்துழைப்புடன் வெள்ளிக் கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

சனாதிபதி செயலகத்தின் 'ரஜரட நவோதய’ திட்டத்தின் கீழ் பொலன்னறுவையின் எழுச்சி’ மாவட்ட அபிவிருத்து நிமித்தம் மக்களது வேண்டுகோளுக்கு இணங்க முதல் கட்டமாக ஹிங்ராகொடையில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன அவர்களது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டின் விவசாய செய்கையை மோலோங்கச் செய்யும் நோக்கத்துடன் 2400 குளங்கள் புணரமைக்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்ட நாட்களாக புணரமைக்கப்படாது இருந்த வடக்கு, கிழக்கு மற்றும் வடக்கு மத்திய மாகாணங்களின் குளங்கள் புணரமைக்கும் பணிகள் ஆரம்பமாயுள்ளது. அதன் முதல் கட்டமாக பொலன்னருவையில் 123 குளங்கள் புணரமைக்கும் பணிகள் ஆரம்பம்.

இந்த குளங்கள் அரச காலங்களிலிருந்து பல ஏக்கர்களை கொண்ட குளங்களாகும். அவற்றில் முதல் கட்டமாக 800 ஏக்கர்களை கொண்ட ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கப்படுகின்றது. இதன் மூலம் 300 விவசாய குடும்பங்கள் இலாபமடைவர்.

இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் விவசாயத்தை முன்னேற்றி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியம். இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு இராணுவத்தின் முழு உதவியுடன் இடம்பெறுகின்றன.இந்த குளங்களை புணரமைப்பதற்காக 16 மில்லியன் ரூபாய் மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய ‘பொலன்னருவை எழுச்சி’ திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துஷித பனன்வல்லகே ஆலோசனைக்கமைய இராணுவத்தினரால் இந்த புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த குள புணரமைப்பின் மூலம் இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 325 குடும்பங்ங்கள் நன்மை பெருவர்.20 வருட காலமாக இது தொடர்பாக அதிகாரிகளினால் இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் 42.2 ஏக்கர் குளங்கள் நிர்மானிக்கும் பணிகள் ஆரம்பமாயுள்ளது.

இந்த திட்டம் ஜனாதிபதி செயலகத்தின் முழுமையான கண்காணுப்பின் கீழ் பொலன்னறுவை பிரதேச கிராம அபிவிருத்தி சமுர்த்தி, கிராம உத்தியோகத்தர்கள், மத்திய சுழல் அதிகாரசபை, நீர்ப்பாசன அதிகாரிகள், விவசாய சேவை திணைக்களம் மற்றும் விவசாய அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

‘ரஜரட நவோதய’ திட்டத்தின் கீழ் ‘பொலன்னறுவையின் எழுச்சி’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் இராணுவ பொறியியலாளர்கள், எந்திரிகள் சேவைப் படையணி மற்றும் சிறப்பு தேர்ச்சி பெற்ற பொறியியலாளர்கள், கடற்படை மற்றும் விமானப்படையினரால் பொலன்னறுவை மாவட்டத்தில் பிரதேச செயலாளர் பிரவின் ஏழு பாடசாலைகள், சமய நிலையங்கள், அரச வைத்திய அலுவலகங்கள், புராதான நிலையங்கள், விளையாட்டு நிலையங்கள் குளம் புணரமைக்கும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி புரிவதற்கு இந்த நிகழ்ச்சி ஆரம்பமாயுள்ளது.

இந்த ‘ சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்ப நிகழ்விற்கு பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, ‘பொலன்னறுவையின் எழுச்சி’ திட்டத்தின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

(புகைப்படம் : சனாதிபதி ஊடக பிரிவு)

Authentic Nike Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK