Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2018 15:51:40 Hours

வெடித்தலதீவு பயிற்ச்சி பாடசாலையில் புதிய சிப்பாய் வீரர்கள் 258 பேர்கள் வெளியேறிய நிகழ்வு

வெடித்தலதீவு இராணுவ கொமண்டோ படையணியின் விஷேட போர் பயிற்ச்சி பாடசாலையில் இருந்து காலாட்படையின் இலக்கம் 6 ஆரம்ப பயிற்ச்சியை 6 மாத காலத்தில் வெற்றிகரமா நிறைவு செய்த 258 பேர்களின் வெளியேறும் அணிவகுப்பு நிகழ்வானது கடந்த (27)ஆம் திகதி சனிக்கிழமை இப் பயிற்ச்சி பாடசாலையின் மைதானத்தில் நடைப் பெற்றது.

இராணுவ சம்பிரதாயத்தின் ஒழுங்கு முறைப்படி பிரியாவிடை அணிவகுப்பும்> கலாச்சார நிகழ்வுகளும்>வண்ணமயமான விளையாட்டுகள் மற்றும் பேண்ட் இசை நிகழ்வும் சண்டை பயிற்ச்சிகள் இப் பயிற்ச்சியின் நிறைவை கொண்டாடுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டதுடன் இப் பயிற்ச்சியாளர்களின் பெற்றோர்களும் உறவினர்களும்; நண்பர்களும் இந் நிகழ்வை பார்வையிட வருகை தந்திருந்தார்கள்.

இந்த நிகழ்வில் வெடித்தலதீவு இராணுவ கொமண்டோ படையணியின் விஷேட போர் பயிற்ச்சியின் படைத் தளபதி லெப்டினென்ட் கேர்ணல் சமன் பெரேரா அவர்களின் அழைப்பிற்கு இணங்க 61ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்அவர்கள் பிரதான விருந்தினராக கலந்துகொண்டார்.

இப் பியற்ச்சியின் முடிவில் திறமையான சிப்பாய் வீரராக ஆர்.ஜீ.பி.ஆர் பிரேமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார். திறமையான சிப்பாய் உடற் பயிற்ச்சி வீரராக சிப்பாய் வீரர் டி.எம்.ஜீ.வய்.எம் திலகரத்ன மற்றும் திறமையான துப்பாக்கி வீரராக சிப்பாய் வீரர் கே.டி.ஏ.பி சந்தகெழும் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப் பயிற்ச்சியில் அனைத்து பயிற்ச்சிகளிலும் தமது திறமைகளை வெளிகாட்டி சிறந்த சிப்பாய் வீரராக ஆர்.ஜீ.பி.ஆர் பிரேமரத்ன வெற்றி கிண்ணத்தை தனதாக்கி கொண்டார்.

கொமாண்டோ படையணியின் கட்டளை தளபதியான பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ மற்றும் 612 படைப்பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் மகிந்த ஜயவர்தன மற்றும் 613 படைப்பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் அஜித் விஜேசூரிய மற்றும் உயர் அதிகாரிகள்> இராணுவ படையினர் மற்றும் பெற்றோர்களும் உறவினர்களும் நண்பர்களும் கலந்த கொண்டார்கள்.

Best Sneakers | GOLF NIKE SHOES