Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2018 15:26:42 Hours

இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி இலங்கை இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கையினால் விடுத்த அழைப்பையேற்று வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்கள் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை உத்தியோகபூர்வமாக இலங்கை இராணுவ தலைமையகத்தில் (16) ஆம் திகதி செவ்வாய் கிழமை காலை சந்தித்தார்.

இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு இராணுவ தளபதியின் பணிமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு இராணுவ தளபதியினால் பாகிஸ்தான் இராணுவ தளபதி வரவேற்கப்பட்டு அங்கிருந்த இராணுவ உயரதிகாரிகளான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களை அறிமுகபடுத்தினார்.

பின்பு பாகிஸ்தான் இராணுவ தளபதி மற்றும் இராணுவ தளபதிகளுக்கு இடையில்பல விடயங்களைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இதன்போது பாகிஸ்தான் இராணுவ தளபதியின் தனிப்பட்ட செயலாளர் பிரிகேடியர் இப்திகார் ஹஸன் சௌஹதரி,பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜத் அலி அவர்களும் இணைந்திருந்தனர்.

இராணுவ தளபதிகளது பேச்சுவார்த்தைகளின் போது இராணுவ அதிகாரிகளது பயிற்சி திறன்களை மேலும் விரிவாக்குவதும், வாய்ப்புகளுக்கான தொடர்ச்சியான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பெரும்பாலான இராணுவத்தினரை பங்கேற்றச் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதிகளுக்கு இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது. பின்பு பாகிஸ்தான் இராணுவ தளபதியினரால் பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்தலும் கையொப்பமிடப்பட்டது.

அதன் பின் இராணுவ பொது பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன அவர்களினால் இலங்கை இராணுவத்தினால் தற்பொழுது மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான விளக்கத்தை பாகிஸ்தான் உயரதிகாரிகளுக்கு முன்வைத்தார்.

பின்பு பாகிஸ்தான் உயரதிகாரிகள் குழுப் புகைப்படத்தில் இலங்கை இராணுவ உயரதிகாரிகளுடன் இணைந்திருந்தனர்.

இந்த பாகிஸ்தான் உயரதிகாரிகள் எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, கடற்படை , விமான படைத் தளபதிகளை சந்திப்பதற்கு உள்ளார்.

மேலும் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரிக்கு விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளனர்.

பாகிஸ்தான் இராணுப் பதவிநிலைப் பிரதானியவர்களின் விபரக் கோவை பின்வருமாறு

ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா நிஷான் ஐ இம்டியாஸ் அவர்கள் (இராணுவம்) அவர்கள் கராச்சி மானிலத்தில் 1960ஆம் வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி பிறந்தார். இவர் பலோச் (காலாட்) படைத் தலைமையகத்தில் கெமிஷன் அதிகாரியாக 1980ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இணைந்தார். மேலும் ஜெனரல் அவர்கள் கணேடிய படையணி மற்றும் டொரொண்டோ கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லுாரியில் கற்கை நெறியைப் பயின்றதுடன் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் போர் தொடர்பான உயர் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார். இவர் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் தகமைக் கற்கை நெறிகளை பயின்றுள்ளதுடன் ஐக்கிய அமெரிக்காவின் மொண்டெரி (கலிபோனியா) பிரதேச நவல் முதுகலைப் பல்கலைக்கழகத்தில் உயர் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு மேலானண்மை முதுகலைப் பட்டப்படிப்பையூம் நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஜெனரல் அவர்கள் காலாட் படையணிப் படைப் பிரிவுகளில் கட்டளை அதிகாரியாக காணப்பட்டதுடன் வடக்கு பிரதேசத்தின் கட்டளைத் தளபதியாகவும் 10 படையணிகள் காலாட் மற்றும் தந்திரோபாய பயிற்றுவிப்பு மையங்களிலும் கட்டளை அதிகாரியாக சேவையாற்றியுள்ளார்.

அந்த வகையில் ஜெனரல் பாஜ்வா அவர்கள் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் , காலாட் மற்றும் தந்திரோபாய பயிற்றுவிப்பு மையங்களிலும் மற்றும் கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லுாரியிலும் சிறந்த அனுபவத்தைப் பெற்றவராகக் காணப்படுகின்றார். மேலும் அவர் காலாட் படையணித் தலைமையக மேஜராகவும் ஜெனரல் பதவிநிலைப் பிரதானியாக 1( திட்டமிடல்) மற்றும் பதவி நிலைப் பிரதானி படையணியிலும் சேவையாற்றியுள்ளார்.

அந்த வகையில் இவர் சவூதி அரேபியாவின் துாதுக் குழுவினராக மூன்று வருட காலமாக சேவையாற்றியதுடன் இவர் கொங்கோ நாட்டின் ஐக்கிய நாடுகளின் சமாதான நடவடிக்கைப் பணிகளில் பாகிஸ்தான் இராணுவ படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாகவூம் சேவையாற்றியுள்ளார். இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் கடமைப் பொறுப்பேற்க முன்னர் பயிற்ச்சிகள் மற்றும் மேற்பார்வை ஜெனரலாக பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பயிற்றுவிப்பு திட்டமிடல் அதிகாரியாகவூம் சேவையாற்றியுள்ளார். அத்தோடு இவர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதியன்று பாகிஸ்தான் இராணுவப் பதவிநிலைப் பிரதானியாக கடமைப் பொறுப்பேற்றார்.

அந்த வகையில் ஜெனரல் அவர்கள் இராணுவ இணைப்புடன் தொடர்புபட்ட இராணுவ குடுபத்திலிருந்து இராணுவத்திற்கு வந்தவராவார். இவர் தமது பாடசாலைக் கல்வியை ராவல்பின்டிக் கல்லுாரியில் மேற்கொண்டுள்ளார். மேலும் இவர் திருமணமாகிய இரு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். இவரது பொழுது போக்காக வாசித்தல் , கொல் விளையாடுதல் , வேட்டையாடுதல் மற்றும் நீச்சல் போன்றன காணப்படுகின்றது. இவர் நாடு முழுவதும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளதுட்ன கலாச்சார நிகழ்வுகளிலும் சிறந்து காணப்படுகின்றார்.

Sport media | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!