Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2018 19:46:30 Hours

கிளிநொச்சி படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு.

திணைக்களத்தினர் இணைந்து சிவில் மக்களுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்னிசை நிகழ்வு 31 ஆம் திகதி இடம்பெற்றது.

கிளிநொச்சியிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 31 ஆம் திகதி இரவு மூன்று பிரபலமான இசை குழுக்களான 4 ஆவது சிங்க படைப்பிரிவின் 'சிஹாராவும், 3 ஆவது கஜபா படைப்பிரிவின் 'சீகோ' மற்றும் ' வடக்கு விண்ட் 'சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இன்னிசை குழுவினர் இந்த இன்னிசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

இன்னிசை நிகழ்வில் ஜாலிய ரணதுங்க, அசல லக்மாலி, சாந்த பெர்ணாந்து, எச். ஆர் சொயிஷா டீ சில்வா அவர்கள் இனிய பாடல்களை இசைத்தனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகாரன அவர்களின் ஆலோசனைக்கமைய 57 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தனவின் தலைமையில்இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

இன்னிசை நிகழ்ச்சியினூடாக தமிழ்,ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சிங்கள பாடல்கள் இசைக்கப்பட்டன. அத்துடன் வானவெடிகளும் வெடிக்கப்பட்டன.

இந்த இன்னிசை நிகழ்ச்சியில் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன, 68 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்னாந்து,பிரிகேடியர் திஸ்ஸ நாணயக்கார, பிரிகேடியர் ஜயந்த குணரத்ன, பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, போன்ற உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Nike sneakers | GOLF NIKE SHOES