Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2017 09:39:29 Hours

முல்லைத்தீவு பிரதேச காணிகள்இராணுவத்தினரால் விடுவிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பயன்படுத்தி வந்த 133.34 ஏக்கர் காணிகள் அப்பிரதேசத்தைச் சேர்ந்தமக்களுக்கு 28 ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் வைத்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது 85 உரிமையாளர்களுக்கு இந்த காணிகள் வழங்கப்பட்டன. இவற்றினுள் கேப்பாபிலவு பிரதேசத்தில் 111.5 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள 68 உரிமையாளர்களுக்கும்> சீனிமோட்டை பிரதேசத்தில் 21.84 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள 17 உரிமையாளர்களுக்கும் இந்த காணிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் அபிவிருத்தி பீ. செந்தில் நந்தனன் , முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ஆர். கேதிஸ்வரன் அம்மையார் அவர்களது பங்களிப்புடன் மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து இந்து மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களான கந்ததாசா குருக்கள், அருள்பணி அன்டன் ஜோஜ் அவர்களது தலைமையில் சமய அனுஷ்டான நிகழ்வும் இடம்பெற்றன.

பின்பு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி 641 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எஸ்.யூ.எம்.என் மான்னகே அவர்களினால் தமிழ் மொழியில் வரவேற்புரை ஆற்றப்பட்டது.

இராணுவத்தினரால் வடபிரதேசங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் இருந்து55,510.58 ஏக்கர் காணிகள் ;2017 டிசம்பர் 1 ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளன.;

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் அபிவிருத்தி பீ.செந்தில் நந்தனன்> முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு> முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ஆர். கேதிஸ்வரன்> கரையார்பற்று பிரதேச செயலாளர் குணபாலன்> 59 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் என்.டீ வன்னியாராச்சி> முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சி.எஸ் அடிபொல > கரையார்பற்று பிரதேச காணி அதிகாரி எஸ். சரவனன்> கேப்பாபிலவு பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.மோகன்ராஜ் அவர்கள் கலந்துகொண்டனர்.

வடபகுதி காணிகள் 2009 ஆம் ஆண்டு; மனிதாபிமான நடவடிக்கைகள் முடிந்த பின்னர் ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வந்ததன் பின்பு படிப்படியாக அரச கட்டளைக்கமைய வட மாகாணத்தில் காணி விடுவிப்பு இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்காவின் வழிகாட்டலில் கீழ் இடம்பெறுகின்றது.

Asics footwear | nike