Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th December 2017 17:26:13 Hours

இராணுவத்தின் நத்தார் கெரோல் நிகழ்வுகள் தாமரை தடாகத்தில்

இலங்கை இராணுவத்தின் நத்தார் கெரொல் நிகழ்வுகள் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் (14) ஆம் திகதி வியாழக் கிழமை தாமரை தடாகத்தில் இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக கொழும்பு மாவட்டத்தின் மறை ஆயர் வணக்கத்திற்குரிய பிதா மெல்கம் கார்டினல் ரஞ்சித் மற்றும் பாதுகாப்பு செயலாளர் திரு கபில வைத்தியரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதி மற்றும் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் ஹரின் பெரேரா அவர்கள் இந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம விருந்தினர்களை வரவேற்றனர்.

இந்த கெரொல் நிகழ்வுகளை கொழும்பு மாவட்டத்தின் மறை ஆயர் வணக்கத்திற்குரிய பிதா மெல்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

புனித ஏன்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் வணக்கத்திற்குரிய பிதாபிரசன்ன ரொஹான் அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வணக்கத்திற்குரிய பிதாபெணடிட் ஜோசப் அவர்கள் ஜெப உரையை நடாத்தினார்.

பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித், சுவிசேஷ படித்தல் மற்றும் கிறிஸ்மஸ் செய்தியை இந்த நிகழ்வில் நினைவூட்டினார்.

சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் கிறிஸ்தவ கெரோல் பக்தி கீதங்கள் மற்றும் பிறார்த்தனைகள் இடம்பெற்றன. இந்த ஒழுங்குகள் அனைத்தமே இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து மற்றும் கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற கிறிஸ்தவ கலைஞர்களால் கிறிஸ்தவ பக்தி கீதங்கள் பாடப்பட்டன. மேலும் செயிண்ட் பெனடிக்ட் கல்லூரி மாணவர்களின் பங்களிப்புடனும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

திருமதி டெய்ஷ்சா சந்திரசிறி, திருமதி திஸ்ஷா சந்திரசிறி, திருமதி திஸ்ஷா சந்திரசிறி, திரு. ஈஷாந்த டி அன்டராடோ, திரு. தயான் டி.எல் பெர்னாண்டோ, திருமதி கொர்னி அலமேதா, அனில் பாரதி, திரு. ரோனி லீச்சிட், திருமதி மரியாசெல்லா கூனித்தேலக், ரெவ் பிர பிரசன்னரொஹான், லெப்டினென்ட் கேணல் லக்ஸ்மன் பெர்னாண்டோ, கெப்டன் டாமியன் கிறிஸ்தவ பக்தி கீதங்களில் இணைந்திருந்தனர். இவர்களுடன் ரணவிரு ரியல் ஸ்டார் பாடகர்களும் இணைந்திருந்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாலினி வைத்தியாரத்ன மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிக்கா சேனாநாயக்க அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பதவி நிலை பிரதானி, தொண்டர் படையணியின் படைத் தளபதி, இராணுவபணிப்பாளர்கள், படைத் தளபதிகள், கட்டளைஅதிகாரிகள் , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , படைவீரர்கள், இராணவ குடும்ப அங்கத்தவர்களின் உறவினர்கள் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர்.

Sports News | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp