Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2017 10:42:05 Hours

இராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்த 157 படை வீரர்களது பயிற்ச்சி வெளியேற்ற நிகழ்வு

அனுராதபுர ரணசெவபுரவிலுள்ள 4ஆவது இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணியில் வழங்கப்பட்ட 36 ஆவது இராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்த 157 படையினருக்கான பயிற்ச்சி வெளியேற்ற நிகழ்வு கடந்த சனிக் கிழமை (2) இப் படையணி மைதானத்தில் இடம் பெற்றது.

அ;நத வகையில் இராணுவ 7படைத் தலைமையகங்களை உள்ளடங்களாக 157 புதிய படை வீரர்கள் காணப்படுவதுடன் இவர்கள் இலங்கை இராணுவ காலாட் படையணி , கஜபா படைத் தலைமையகம் ,விஜயபாகு காலாட் படைத் தலைமையகம் , பொறியியலாளர் சேவைப் படையணி , இலங்கை இராணுவ மருத்துவப் படையணி , இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி போன்றவற்றில் இணைக்கப்பட்டு கிட்டத் தட்ட 5மாதகால அடிப்படை இராணுவப் பயிற்ச்சிகளை நிறைவு செய்ததுடன் இராணுவத் தளபதியவர்களின் மரநடுகையின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் முகமாக இப் படை வீரர்களுக்கு 10 மரக் கன்றுகள் வீதம் வழங்கப்பட்டன.

அந்த வகையில் பயிற்ச்சிகளை நிறைவூ செய்த 157 படை வீரர்களுக்கு 1570 மரக் கன்றுகள் இப் பயிற்ச்சி வெனியேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதியவர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் இராணுவத்தினுள் இவ்வாறான மரநடுகைத் திட்டங்களை தாம் மேற்கொள்வேன் என இவர்களால் சத்தியப் பிரமானமும் எடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட 56ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் திஸ்ஸ நாணயக்கார அவர்களால் இப் படை வீரர்களுக்கான விருதுளும் வழங்கிவைக்கப்பட்டது.

சிறந்த படைக் குழுவிற்கான தெரிவுகள் பின்வருமாறு

சிறந்த படைக் குழு – கெமுனுக் குழு

சிறந்த படைக் குழுவிற்கான தளபதி – லெப்டினன்ட் எல் ஆர் டீ ஏ அபேரத்தின 5ஆவது கெமுனு ஹேவாப் படையணி

சிறந்த படைக் குழுவிற்கான சார்ஜன்ட் - சார்ஜன்ட் பி ஏ ஆர் விஜேகுமார 1ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி

சிறந்த படைப் பிரிவிற்கான தளபதி – கோப்ரல் டீ பி சுமணரத்தின 1ஆவது கெமுனு ஹேவாப் படையணி

சிறந்த உடற் பயிற்ச்சி பயிற்றுவிப்பாளர் - லான்ஸ் கோப்ரல் கே டீ என் ஜயந்த 12ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி

சிறந்த துப்பாக்கிச் சூட்டாளர் - சாதாரண படை வீரர் பி எம் ராஜபக்ஷ

சிறந்த உளவத்தாளர் - சாதாரண படை வீரர் ஏ ஜி எஸ் ஜ பண்டார

அனைத்திலும் சிறந்து விளங்கியவர் - சாதாரண படை வீரர் டபிள்யூ எம் ஜி பீ என் வீரசேகர

Best Authentic Sneakers | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov