Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2017 16:28:59 Hours

வருடாந்த உடுவப் பெரெஹரா யாழ் நாக விகாரையில் இடம் பெற்றது

யாழ் ஸ்ரீ நாக விகாரையில் உடுவப் பெரெஹரா நிகழ்வானது இராணுவத்தினரது பங்களிப்போடு கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை வேளை (3) இடம் பெற்றது.

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் ஆலோசனைக்கமைய 51ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா , 512ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சரத் திசாநாயக்க ,இலங்கை பொலிஸ் ,அரச அதிகாரிகள் மற்றும் அனுசரனையார்களது பங்களிப்போடு இவ் உடுவப் பெரெஹரா வழிபாட்டிற்கான ஒழுங்கமைப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

அந்த வகையில் இப் பெரெஹரா நிகழ்வானது வடக்கின் முத்தவெலி விளையாட்டரங்கில் காலை வேளை பி .ப 7.30 மணியளவில் ஞாயிற்றுக் கிழமை (3) ஆரம்பிக்கப்பட்டு காங்கேசன்துரை வீதியினுாடாக வைத்தியசாலை வீதியினுாடாக வேம்படி சந்தியில் மற்றும் பலாலி வீதியினுாடாக பயணித்து பி .ப 10.30 மணியளவில் விகாரையை வந்தடைந்தது.

இந் நிகழ்வில் யாழ் மற்றும் கண்டி பாடசாலை மாணவர்கள் , யாழ் மற்றும் கிளிநொச்சி பிரதேச நடனக் கலைஞர்கள் இலங்கை விமானப் படை மற்றும் இராணுவ படையினரது உறுப்பினர்களால் பலவாறான கலை வெளிப்பாட்டு நிகழ்வூகள் வெளிக்காட்டப்ப்டடன. பாரம்பரிய நடனக் கலைஞர்கள் , மேள வாத்தியக் குழுவினர் மற்றும் அலங்கரிக்கப்பட்ட யானைகளது பங்களிப்போடு ஸ்ரீ நாக விகாரை வழிபாடுகள் இடம் பெற்றன.

அந்த வகையில் பலாங்கொடை ராஜு எனும் யானை கலசத்தை சுமந்து வந்ததுடன் அக் கலசத்தை யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியவர்கள் பெற்று மண்டபயவில் வைத்தார்.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் திரு என் வேதநயாகம் மற்றும் பல அரச அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

Sports News | Nike Shoes, Sneakers & Accessories