Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2017 11:20:56 Hours

இராணுவத்தினரின் ஹோல்ப் சம்பியன் போட்டிகள் திருகோணமலையில்

முதல் முறையாக பஹ்ரைன், கனடா, எஸ்டோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய கோல்பினார் கவுன்சில் சர்வதேச டூ ஸ்போர்ட் மிலிட்டரி அமைப்பின் கீழ் 11 ஆவது உலக இராணுவ கால்பந்து 2017 சாம்பியன்ஷிப் போட்டிகள் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை திருகோணமலை விமானப்படை முகாமில் இடம்பெறும்.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களது தலைமையில் திருகோணமலை சீனக்குடா ஈகிள்ஸ் கோல்ப் விங்கில் நேற்றைய தினம் (13) ஆம் திகதி இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க,விமானப் படையின் பதவி நிலை பிரதானியான எயார் வைஷ் மார்ஷல் சுமங்கள டயஸ்,இராணுவ மற்றும் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவ ஹோல்ப் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் நந்தன ஹதுருசிங்க அவர்களின் தலைமையில் இலங்கை பாதுகாப்பு சேவை சங்கத்தின் கோப்ரல் பி.டப்ள்யு.ஏ.டீ புஸ்பகுமார,செபர் ஐ.பி.பி.கே இளங்கரத்ன மற்றும் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.ஏ.சி ரத்னாயக போன்றோர் இந்த போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்தப் போட்டியின் முதல் சுற்று திங்கட் கிழமை (13) ஆம் திகதி பிற்பகல் ஆரம்பமாகியது.

இந்தப் போட்டி 2016 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் 10 ஆவது உலக இராணுவ கோல்ப் சாம்பியன்ஷிப்பில் இலங்கை பங்குபற்றியது. மேலும் முதல் தடைவையாக இந்தப் போட்டி இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை இடம்பெற்றுள்ளது.

சிஐஎஸ்எம் அமைப்பு இலக்கிய சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஒழுங்குமுறை அமைப்புகளில் ஒன்றாகும். 136 நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவதில் நடைமுறையில் உள்ளது. இது உலக விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாகும்.

சிஐஎஸ்எம் ஆண்டுதோறும் இருபது இராணுவ உலக சாம்பியன்களையும் 30க்கும் மேற்பட்ட வெவ்வேறு விளையாட்டு,பிராந்திய போட்டிகள்,இராணுவ உலக விளையாட்டுகள் மற்றும் சமீபத்தில் குளிர்கால விளையாட்டுகள் மற்றும் உலக கெடட் விளையாட்டு அகியவற்றிற்கான ஏற்பாடுகள் செய்துள்ளன. மேலும் சமாதான நடவடிக்கைகள் மற்றும் ஒற்றுமைக்காக சிஜஎஸ்எம் மிகவும் குறிப்பிடதக்க வகையில் விளையாட்டுகளில் முக்கியதுவத்தை வழங்குகின்றது.

Running sport media | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov