Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2017 16:58:59 Hours

இராணுவத் தளபதியைச் சந்தித்த புதிய கடற் படைத் தளபதி

இலங்கை கடற் படையின் 22ஆவது புதிய தளபதியாக வைஸ் அட்மிரால் சிறிமேர்வன் ரணசிங்க அவர்கள் டபிள்யூ டபிள்யூ வீ ஆர் டபிள்யூ பீ யூஎஸ்பீ என்டீசி பிஎஸ்சி ஏஓ டபிள்யூசி இன்று காலை (06) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இவ்வாறு வருகை தந்த புதிய கடற் படைத் தளபதியவர்களுக்கு இலங்கை இராணுவ இராணுவ காலாட் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு இராணுவ நிறைவேற்றுப் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வரவேற்றார்.

அத்துடன் இராணுவத் தளபதியவர்கள் தம்முடன் சேவையாற்றுகின்ற இராணுவ அதிகாரிகளை புதிய கடற் படைத் தளபதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் போது இவ்விரு தளபதிகளுக்குமிடையே தமது கடமைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வின் இறுதியில் இவ்விருவருக்குமிடையிலான நினைவுச் சின்னங்கள் கையளிக்கப்பட்டது.

அந்த வகையில் இலங்கை கடற் படையின் புதிய தளபதியவர்கள் கடற் படை வராலாற்றில் கொழுப்பு கடற் படைத் தளத்தில் கட்டளை அதிகாரியாக நீட்ட காலம் பயணித்துள்ளார்.

மேலும் இவர் கடற் படைச் சேவையில் 2002 முதல் 2004 வரை கட்டளை அதிகாரியாக காணப்பட்டதுடன் 2008ஆம் ஆண்டு தெற்கு கடற் படைத் தலைமையக பிரதி கட்டளைத் தளபதியாகவும் 2012ஆம் ஆண்டு தெற்கு கடற் படைத் தலைமையக தளபதியாகவும் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மேற்கு கடற் படைத் தலைமையக தளபதியாகவும் இவர் சேவையாற்றினார்.

அத்துடன் இவர் கடலோர அக்கடமியின் நடவடிக்கை அதிகாரியாகவும் , கடற் படை ஆயுதங்களின் பணிப்பாளராகவும் மேலும் கடலோர திட்டமிடல் மற்றும் இலங்கை கடலோர காவலட படையின் பணிப்பாளர் நாயகமாகவும் சேவையாற்றியுள்ளார்.

அத்துடன் இவர் பிரிட்டானிய ரோயல் கடற் படைக் கல்லுhரியில் 1997ஆம் ஆண்டு சிறந்த பட்மிட்டன் வீரராக திகழ்ந்துள்ளார்.

அந்த வகையில் இப் புதிய கடற் படைத் தளபதியவர்களின் மனைவியாக சந்தியா காணப்படுவதுடன் சுபுணி எனும் ஓர் மகளும் இவருக்கு உண்டு.

bridge media | Sneakers Nike Shoes