Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th October 2017 10:41:59 Hours

கெடெட் அதிகாரிகளின் பயிற்ச்சி நிறைவுகள்

பாதுகாப்பு அமைச்சின் தேசிய கெடெட் படையணியில் இணைந்தவர்கள் தமது பயிற்றுவிப்பு பயிற்ச்சிகளை நிறைவு செய்து ரண்தபயிலுள்ள தேசிய கெடெட் படையணியின் இன்று காலை (19)இவ் வெளியேற்ற நிகழ்வு இடம் பெற்றது.

கடந்த 135வருடங்கள் முதல் 2017 ஆண்டுக் காலப் பகுதி வரை இடம் பெறுகின்ற இப் பயிற்ச்சிகளின் ஹேர்மன் லொஸ் வெற்றிக் கிண்ணம் மற்றும் டி சொய்சா வெற்றிக் கிண்ணங்களைச் சூடும் நிகழ்வு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் மற்றும் பல உயர் அதிகாரிகளின் தலைமையில் இடம் பெற்றது.

அந்த வகையில் மேற்படித் தலைமையக வளாகத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் நாடளாவிய ரீதியில் காணப்படும் 2000 பாடசாலைகளை முன்னிலைப் படுத்தி 60 குழுக்களைக் கொண்ட 1500 கெடெட் அதிகாரிகள் மற்றும் இந்தியா ,பங்களாதேஷ் ,மாலைதீவு ,நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 60 படைவீரர்கள் மற்றும் 15 அதிகாரிகள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரான் ருவன் விஜேவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இதன் செயலாளரான திரு சுணில் சமரவீர ஜனாதிபதிச் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின ,பாதுகாப்புப் பிரதானியான அட்மிரால் ஆர் சி விஜேகுணரத்தின ,பதவிநிலைப் பிரதானிகள் மற்றும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க போன்றௌறும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு இந் நிகழ்விற்க்கு வருகை தந்தவர்களை தேசிய கெடெட் நிலையத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் ஏ கெ பி விக்கிரமசிங்க (ஓய்வு) அவர்கள் வரவேற்றார்.

இதன் போது பயிற்ச்சிகளில் தமது திறமையை வெளிக்காட்டிய பயிலுனர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் பாதுாகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ கெ பி விக்கிரமசிங்க (ஓய்வு) போன்ரோர் வழங்கி வைத்தனர்.

இதன் போது கந்தானை டி மெசெனொட் கல்லுாரியைச் சேர்ந்த கெடெட் ஆண்களுக்கான சிறந்த படைக் குழுக்கான வெற்றியையீட்டி ஹேர்மண்லொஸ் விருதைப் பெற்றனர்.

இதன் இரண்டாம் இடத்தை கொழும்பு நாலந்த கல்லுாரி பெற்றதுடன் மூன்றாம் இடத்தை இப்பகமுவ சென்ரல் கல்லுhரி பெற்றுக் கொண்டது.

இதன் போது குருணாகல் மாலியதேவ பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கெடெட் பெண்களுக்கான சிறந்த படைக் குழுக்கான வெற்றியையீட்டி டி சொய்சா விருதைப் பெற்றனர்.

இதன் இரண்டாம் இடத்தை கொழும்பு கௌதமி வித்தியாலயம் பெற்றதுடன் மூன்றாம் இடத்தை கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலயம் பெற்றுக் கொண்டது.

இதன் போது இராணுவத்தினரின் சாகசக் கண்காட்சி விளையாட்டுக்கள் மற்றும் அணிவகுப்பு மரியாதை போன்றனவும் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் முப்படையையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் ,இக் கெடெட் பயிலுனர்களின் பெற்றரோர் மற்றும் பாரிய அளவிலான உயர் அதிகாரிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு வெளியேறிய கெடெட் பயிலுனர்கள் நடவடிக்கைப் பயிற்ச்சிகள் ,துப்பாக்கிச் சூட்டுப் பயிற்ச்சிகள் மற்றும் உலக வரைபட அளவீடு போன்ற பல பயிற்ச்சிகளை மேற்கொண்டு வெளியேறியதுடன் சார்க் அதிகாரிகளும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

Nike sneakers | FASHION NEWS