Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2017 09:09:03 Hours

23 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவ தின நிகழ்வுகள்

68 ஆவது இராணுவ நினைவு தினத்தையிட்டு 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்டப்ள்யூ.எஸ்.டீ.பீ பனன்வல அவர்களது தலைமையில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

அதன் முதல் கட்டமாக கதிரவெலி மகளீர் விடுதியில் கஸ்ட்டத்தில் வாழ்ந்து வரும் பெண் பிள்ளைகளுக்கு புத்தக ராக்கைகள் , பாடசாலை உபகரணங்கள் மற்றும் நிதி அன்பளிப்பும் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களுக்கு மதிய போசன விருந்தும் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்து வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 231 மற்றும் 23 படைப் பிரிவு தலைமையகங்கள் இணைந்து விபுலானந்தா முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வரும் முதியோர்களுக்கு நடமாடும் சிகிச்சை பிரிவின் ஊடாக சிகிச்சை வசதிகளை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் குவாடி முதியோர் இல்லத்தில் சிரமதான பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர். அத்துடன் இராணுவத்தினர் இரத்ததானங்களும் வழங்கினர்.

மேலும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி 23 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கொடிகள் ஏற்றி மர நடுகை நிகழ்வுடன் சமய ஆசீர்வாத வழிபாட்டுடன் இராணுவ நினைவு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன.

Sports brands | Trending