Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2017 12:18:42 Hours

இராணுவ தலைமையகங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுகள்

2017ஆம் ஆண்டிற்கான 54ஆவது முறையாக இடம் பெறும் இராணுவ தலைமையகங்களுக்கிடையிலான விளையட்டு நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (03) காலை வேளை ஹோமாகமவில் உள்ள தியகம அரங்கில இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ விளையாட்டுத் தலைமையகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் ரோஹன பண்டார அவர்களை இராணுவ விளையாட்டுக் கழகத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் வரவேற்றார்.

அத்தோடு இந் நிகழ்வில் ஒலிப்பிக் சுடரை பிரதம அதிதிகள் ஏற்றிவைத்து இவ் விiயாட்டு நிகழ்வை ஆரம்பித்தனர்.

அந்த வகையில் வெளிநாடுகளிலும் தமது விளையாட்டுத் திறமைகளைக் காண்பித்து தங்க ,வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற 20 மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் மேலும் பல விளையாட்டு வீரர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிட்டத் தட்ட 3நாட்களாக இடம் பெற்ற இவ் விளையாட்டு நிகழ்வுகளில் இராணுவத்தின் 24தலைமையகங்களைப் பிரதிநிலைப் படுத்தி 1500 இராணுவ விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் 1950ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒலிப்பிக் போட்டிகளில், இராணுவத்தை முன்னிலைப் படுத்தி லெப்டினன்ட் டன்சன்ட் வையிட் எனும் இராணுவ அதிகாரியவர்கள் தங்கப் பதக்கத்தை இலங்கை நாட்டிற்கு வென்றெடுத்துள்ளார்.

மேலும் பல ஆசிய ,ஒலிப்பிக் மற்றும் உகல பாதுகாப்பு சேவை விளையாட்டுக்களில் இராணுவமானது பலவாறான திறமைகளை வெளிக்காட்டி தங்க ,வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்விற்கு இராணுவ விளையாட்டு பணியகத்தின் பிரிகேடியர் அருண சுதசிங்க மற்றும் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் செயலாளரான பிரிகேடியர் சந்தன ரணவீர அத்துடன் மேலும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

. Running Sneakers Store | Nike