Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவம் மற்றும் பொது மக்கள் நீர்பாசணக் கால்வாய் சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபாடு

இராணுவத்தினர் மற்றும் பொது மக்களின் பங்களிப்போடு பண்டிவெட்டியாறு துனுக்காய் மற்றும் வவுணிக் குளம் போன்ற பிரதேசத்திலுள்ள 20 கிமீ நீளமுடைய நீர்பாசணக் கால்வாயை சுத்திகரிக்கும் பணிகள் கடந்த வியாழக் கிழமை (07) இப் பிரதேசங்களில் இடம் பெற்றது.

அந்த வகையில் 9 பின்னங்கிய கிராமங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் வேண்டுகோளிற்கிணங்க இச் சுத்திகரிப்பு சிரமதானம் இடம் பெற்றது.

இந் நிர்மானிப்பு பணிகள் 700 இராணுவ வீரர்கள் மற்றும் 200 பொது மக்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.

அந்த வகையில் வவுணிக் குளம் நீர்க் கால்வாயானது கிட்டத் தட்ட 40 000 ஏக்கர் பரப்பளவு பிரதேசத்திற்கு மூன்று விதங்களில் அமைக்கப்பெற்றுள்ள நீர்க் கால்வாய் மூலம் துனுக்காய் பிரதேசத்திற்கு நீரைப் பாய்ச்சுகிறது.

இச் சிரமதானப் பணிகள் 65ஆவது கட்டளைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் தலைமையில் 651 , 652 மற்றும் 653 ஆவது படைப் பிரிவினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

அதேவேளை இந் நீர்பாசனக் கால்வாயனது கிட்டத் தட்ட 2,672 மேற்பட்ட பயிர்ச் செய்கை பிரதேசங்களான ஜாழ மற்றும் மகாவலி போன்ற பிரதேசங்களுக்கு நீரைப் பாய்ச்ச வல்லது.

இச் சிரமதானப் பணித்திட்டத்தில் வவுணிக் குளம் நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியளாலர் திரு பி விகாரன் ,வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பொறியிளலாளர் பி ராஜகோபு (திட்டமிடல்) ,துனுக்காய் பிரதேச செயலாளர் திரு ஐ பிரதாபன் மற்றும் துனுக்காய் பிரதேசத்தின் பொறியியலாளர்கள் அத்துடன் கிராம சேவகர்கள் போன்றௌர் இதில் பங்கேற்றனர்.

இலங்கை இலேசாயுத காலட் படையணியின் 10 ஆவது மற்றும் 19ஆவது படையணி ,இலங்கை இலேசாயுத காலட் படையணியின் (தொண்டர் ) 21 ஆவது படையணி ,இலங்கை சிங்கப் படையணியின் (தொண்டர் ) 15 ஆவது படையணிகஜபா படையணியின் 1ஆவது மற்றும் 11 ஆவது படையணி ,விஜயபாகு காலாட் படையணியின் (தொண்டர் ) 20 ஆவது படையணி ,இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 7ஆவது படையணி போன்றௌரின் பங்களிப்போடு இச் சிரமதானப் பணிகள் இடம் பெற்று நிறைவடைந்தது.

மேலும் இச் சிரமதானப் பணிகளின் விவசாயிகளுக்கு சிறந்த பயனளிக்கும் விடயமாகக் காணப்பட்டது.

Buy Sneakers | Nike Air Max 270