Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பூநகரி பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தேங்காய் நாற்றுகள் மற்றும் பயிற்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது

பூநகரி பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு தேங்காய் நாற்றுகள் மற்றும் தென்னை சாகுபடிக்கான பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் 66ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்டிவலானவின் தலைமையில் அரசபுரகுளத்திலுள்ள இராணுவ பயிற்சி முகாமில் செப்டம்பர் (7) ஆம் திகதி வெற்றிகரமான நடாத்தப்பட்டது.

66ஆவது படைப் பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் ஏழை மக்களின் உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தேங்காய் நாற்றுகள் நன் கொடையாக இப் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் 100 வறிய குடும்பங்களுக்கு தேங்காய் நாற்றுகள் அதற்கு தேவையான வழிக்காட்டல்கள் போன்றவை இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இத்திட்டத்தில் விவசாயத்துக்கும் நாற்றுகள், உரங்கள், கிணறுகள் நிர்மாணிப்பதற்கும் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதட்கும், தெழில்நுடப உதவிக்கும் (Silvermill Group,) சில்வர் மில் குருப் ரூ. 2 மில்லியன் பெருமதியான தெகையை வழங்கியது.

இந்த நிகழ்விற்கு பூநகரி பிரதேச செயலாளர் திரு. கிரிஸ்ணேந்திரன், தென்னை பிராந்திய முகாமையாளர் வயி குணநாதன் அவர்கள் கலந்து கொண்டு இவர்களது எதிர்கால விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

Nike air jordan Sneakers | Air Max