Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2017 13:28:06 Hours

இராணுவ தளபதி அமெரிக்க இராணுவ பதவிநிலை பிரதானி மற்றும் பசிபிக் கட்டளை தளபதிளை சந்திப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பசிபிக் இராணுவ தளபதிகளின் மாநாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்ட சமயத்தில் அமெரிக்க இராணுவ பதவி நிலை பிரதானியான ஜெனரல் மார்க் எ. மில்லி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்த மூத்த அதிகாரி 39 ஆவது அமெரிக்க பதவிநிலை பிரதானியாக கடமை வகிக்கின்றார். இவர் 2015ஆம் ஆண்டு 14 ஆம் திகதி இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரியாவார்.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (19) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அமெரிக்க இராணுவ பசிபிக் கட்டளை தளபதி ஜெனரல் ரொபட் ப்ரூக்ஸ் பிரவுன் அவர்களை சந்தித்தார். நான்கு நாட்கள் இடம்பெறும் இராணுவ உயரதிகாரிகளின் மாநாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்ட போது இராணுவ தளபதி இந்த பசிபிக் கட்டளை தளபதியை சந்தித்தார்.

இருவர்களுக்கும் இடையில் பாதுகாப்பு விடயம் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

ஜெனரல் ரொபர்ட் புரூக்ஸ் பிரவுன் அமெரிக்காவின் இராணுவத்தின் நான்கு நட்சத்திர ஜெனரலாக உள்ளார். இவர் அமெரிக்க இராணுவப் பசிபிக் தளபதியாக பதவி வகிக்கின்றார். இவர் ஏப்ரல் 30, 2016 அன்று நான்கு நட்சத்திர ஜெனரலின் தரவரிசை பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

Sports brands | FASHION NEWS