Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

12th September 2017 18:55:45 Hours

துருக்கி இராணுவ இணைப்பாளர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான துருக்கி இராணுவ இணைப்பாளரான கேர்ணல் கெமல் ஹகர்மென் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா அவர்களை (12) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இராணுவப தலைமையகத்தில் சந்தித்தார்.

இவ்விருவருக்கும் இடையில் இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.