Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2017 16:54:35 Hours

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியை சந்தித்து பாராட்டிய தேரர்

பௌத்த தேரரான புத்தளங்க ஆனந்த நாயக்க தேரர் மற்றும் வடக்கு இராணுவத் தலைமையத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ரோர் கடந்த செவ்வாய்க் கிழமை (8) யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியனை அவரது பிரத்தியேக அறையில் சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர்.

அந்த வகையில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் மரணித்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திர அவர்களின் மனைவிக்கும் குடும்பத்தாரிற்கும் தமது ஆழ்ந்த துக்கத்தை தெரிவித்த மனிதாபிமான செயற்பாடானது இந் நாட்டிலுள்ள சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என மேற்படி பௌத்த தேரரான ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்தார்.

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கினங்க வடக்கு இராணுவத் தலைமையத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் மேற்படி நீதிபதியவர்களைச் சந்தித்து அவரது செயல்பாட்டிற்காக பாராட்டினை தெரிவித்தார்.

நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியனின் இச் செயற்பாடானது உலகறிய செய்துள்ளது. என மிகவும் மன நெகழ்வோடும் ஆசிர்வாதத்துடனும் தெரிவித்த புத்தளங்க பௌத்த தேரரான ஆனந்த தேரர் நீதிபதியின் இச் செயலானது கண்ணீர், உணர்வுகள், உணர்ச்சிகள் ஆகியவற்றுக்கு சாதியில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளதாகவும் கூறினார்.

இதன் போது இப் பௌத்த தேரரினால் நீதிபதிக்கு பௌத்த மத சிலையொன்றும் வழங்கப்பட்டுதுடன் மேலும் தேரர் இந்து மற்றும் பௌத்த பலங்கால தர்மத்தின் பிரகாரம் நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் அருந்தும் நீருக்கும் வாழும் பூமிக்கும் சூரிய கதிர்களுக்கும் சாதியென்பது இல்லை என்பதையும் கூறினார்.

இதன் போது நீதிபதி இளஞ்செழியன் மேற்படி மரணித்த பொலிஸ் சார்ஜன்ட் இன் குடுப்பத்தாரிற்கும் அவரது இரு பிள்ளைகளுக்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் தாம் செய்வதாகக் கூறியதுடன் மரணித்த மேற்படி பொலிஸ் சார்ஜன்ட அவர்களுக்கு சுமார் 2 இலட்சம் பெறுமதியான நலன்புரி பணத்தையும் வழங்கியதாக தெரிவித்தார்.

Authentic Nike Sneakers | Autres