Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2017 20:21:52 Hours

கொழும்பு பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு பணிகளில்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒரு கிழமையாகாக டெங்கு ஒழிப்புத்திட்டத்தின் நாளாவது நாளான புதன் கிழமை 5 ஆம் திகதி இராணுவம், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து 60 குழுக்கள் கொழும்பு கிராண்டபாஸ் பிரதேசங்களில் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த ஒழிப்பு பணிகள் எதிர்வரும் சனிக் கிழமை 08 ஆம் திகதி வரை இடம்பெறும். நாளைய தினம் இந்த குழுவினர் தெமட்டகொட மற்றும் பொரலை பிரதேசங்களில் இந்த பணிகளை மேற்கொள்ளுவார்கள். இந்த பணிகளுக்கு இராணுவத்திலிருந்து 200 படை வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும் இராணுவ அங்கத்தவர்கள் 60 பேர் கடுவெல, பிலியந்தல, ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கஹதுடுவ பிரதேசங்களில் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

582,141 மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் இணைந்து மீரிகம, தொம்பை, களனி,அத்தனகல, மதுகம, வாதுவ மற்றும் பண்டாரகம பிரதேசங்களில் 250 படை வீரர்களின் பங்களிப்புடன் கம்பஹா, களுத்தறை மாவட்டங்களில் டெங்கு பணிகளை மேற்கொண்டனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களது தலைமையில் கொழும்பு நகரசபை அங்கத்தவர்களது ஒத்துழைப்புடன் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் சனிக்கிழமை 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

trace affiliate link | Jordan Shoes Sale UK