Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2017 15:57:39 Hours

இராணுவ 5 ஆவது மருத்துவ படையணி சூடான் வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயார்

தென் சூடான் வைத்தியசாலைக்கு சமாதான நடவடிக்கை கடமையின் நிமித்தம் சென்ற மருத்துவ படையணி அவர்களது கடமை முடிவடைந்ததன் பின்பு எமது நாட்டிற்கு வருவதற்கு தயாராக உள்ளனர்.

இந்த படையணியை விடுவிக்கும் காரணத்தின் நிமித்தம் செல்லவுள்ள இலங்கை 5 ஆவது இராணுவ மருத்துவ படையணி 30 ஆம் திகதி செவ்வாய்கிழமை வேரஹெர பகுதியில் அமைந்துள்ள மருத்துவ படைத் தலைமையக மைதானத்தில் மருத்துவ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க அவர்களுக்கு படையினர் கௌரவ அணிவகுப்பு மரியாதையை செலுத்தினர். பின்பு மருத்துவ படைத் தளபதியினால் சூடான் செல்லவிருக்கும் இராணுவத்தினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்த மருத்துவ படையணிக்கு எம்.பி.எஸ்.ஆர் அமரசேகரவின் கட்டளையின் கீழ் 5 ஆவது மருத்துவ படையணியின் 4 விஷேட வைத்தியர்கள், 3 வைத்திய அதிகாரிகள், 7 நிர்வாகஅதிகாரிகள் , 41 இலங்கை மருத்துவ படையணியின் இராணுவ வீரர்கள், மற்றும் இலங்கை சமிக்ஞை படையணி, இலங்கை பொறியியலாளர் படையணி, இலங்கை மின்சார மற்றும் பொறியியலாளர் படையணி, இலங்கை இராணுவ போர்கருவி சிறப்பணி படைவீரர்கள் உள்ளடங்கிய 9 படைவீரர்கள் இந்த கடமையின் நிமித்தம் சூடான் செல்வதற்கு தயாராக உள்ளனர்.

Buy Sneakers | Nike Air Max 270