Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கெமுனு ஹேவா படையினரால் கல்லுரி கட்டிடம் மீள் நிர்மானிக்கப்பட்டுள்ளது

இரத்தினபுரி கலாவன ஆரம்ப பாடசாலை 50 வருட நிறைவைக் கொண்டு பாழடைந்த நிலையில் காணப்பட்டது. அக் கட்டிடத்தை ஹெமுனு ஹேவா படையணியின் நன்கொடை நிதியூடன் அப் படையணியைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மீள் நிர்மானிப்பு செய்தனர்.

நீண்ட கால தேவையின் நிமித்தம் அப்பிரதேச மக்கள் இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் உபுல் விதான அவர்களினால் இந்த ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கெமுனு ஹேவா படையணியைச் படைவீரகள் பொறியியலாளர் படை வீரர்களும் இணைந்து 7 இலட்ச ரூபாய் செலவில் மீள் நிர்மானித்து பாடசாலை அதிபர் அவர்களுக்கு பாரமளித்தனர்.

மீள் நிர்மானிக்கப்பட்ட இந்த கட்டிட திறப்பு விழா பாடசாலை நிர்வாகத்தின் பணிப்புரையின் கீழ் மேஜர் ஜெனரல் உபுல் விதான அவர்களின் பங்களிப்புடன்குகுலுகம நவதுன் தெகொரலே நீதி சங்கநாயக மதகுரு குகுலேகம சுமன நாயக மதகுருமாரின் சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றது.

இந்ந நிகழ்விற்கு கெமுனு ஹேவா படையணியின் கட்டளை தளபதிஇ பிரதி கட்டளை தளபதிஇ கலவான கல்வி வலய பணிப்பகத்தின் ஆசிரியரி; பயிற்சி நிலையத்தின் நிர்வாக அதிகாரி பிரேமசிரி பாடசாலை அதிபர் அநுர கமாரச்சி ரெஜிமேன்ட் தலைமையக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Sport media | UK Trainer News & Releases