Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd July 2019 07:54:00 Hours

“சத்விரு அபிமான்” நலன்புரி திட்டத்தின் கீழ் முப்படையினர்களுக்கு உதவிகள்

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் “சத்விரு அபிமான்” நலன்புரி திட்டத்தின் கீழ் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்து அவயங்களை இழந்த படையினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரினது வாழ்வாதாரம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் போர் வீரர்களின் குடும்பங்களுக்கு 700 மில்லியன் ரூபா பெறுமதிக்கும் அதிகமான வீடமைப்பு, காணி மற்றும் கல்வி புலமைப்பரிசில்கள் முப்படைகளின் முனைஞரும் பிரதானியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இம் மாதம் (22) ஆம் திகதி சுகததாஸ உள்ளரங்கில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன..

பாதுகாப்பு அமைச்சினால் “நமக்காக நாம்” எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 1504 முப்படையைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வீடுகளும், அவர்களது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முப்படையைச் சேர்ந்த போர் வீரர்களுக்கு 25 புதிய வீடுகளும், விஷேட தேவையுடைய படை வீரர்களுக்கு 2.5 மில்லியன் ரூபாய் செலவில் வீடுகளும், தேசிய பாதுகாப்பு நிதி அனுசரனையின் கீழ் ரூ .504.93 மில்லியன் செலவில் 925 பயணாளிகளுக்கு வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சினால் இந்த திங்களன்று 1504 பயனாளிகளுக்கு கொலோனா, ஆனமடுவ, எலஹெரா மற்றும் முந்தல் பகுதிகளிலிருந்து 246 காணித் துண்டுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.அத்துடன் 'விரு சாரு சிசு செரியா' திட்டத்தின் கீழ் அந்த படை வீர ர்களது 308 பிள்ளைகளுக்கு DFCC வங்கியின் அனுசரனையில் ரூ .7.68 மில்லியன் செலவில் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சினால் 2010 ஆம் ஆண்டு, போர் வீராங்கனைகளுக்காக 2917 புதிய வீடுகளும் நிர்மானிக்கப்பட்டன. அத்துடன் 4487 வீடுகள் 2014 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளதுடன் இந்த திட்டத்தின் கீழ் மொத்தமாக 7404 வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மேன்மை தங்கிய ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மாஅதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் போன்றோர் கலந்து கொண்டு மங்கள விளக்குகள் ஏற்றி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.url clone | AIR MAX PLUS