Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th December 2017 10:15:50 Hours

‘ரட ரகின ஜாதி’ எனும் தொணிப்பொருளின் கீழ் 191 கெடெற் அதிகாரிகள் இராணுவத்தில் இணைவு

இலங்கை இராணுவ எகடமியில் பயிற்சிகளை நிறைவு செய்த 191 கெடெற் அதிகாரிகளின்பயிற்சி வெளியேறும் நிகழ்வு (17) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தியத்தலாவையில் உள்ள இலங்கை இராணுவ எகடமியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஜனாதிபதியும் படைத்துறைகளின் முனைஞரும் பிரதானியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்தார்.

மேலும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன பிசி, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் இராணுவ எடமியின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரியந்த சேனாரத்ன அவர்களும் ஜனாதிபதியை வரவேற்றனர்.

இந்த பயிற்சியில் 84 ஆவது உற்கொள்ளலின் கீழ். இவற்றில் 112 தொண்டர் அதிகாரிகளும், பாதுகாப்பு பல்கலைகழகத்தை சேர்ந்த 106 கெடெற் அதிகாரிகளும், சீனா இராணுவ எகடமியில் பயிற்சியை மேற்கொண்ட 3 அதிகாரிகள் மற்றும் 15 ஆவது உட்கொள்ளலின் கீழ் மகளீர் கெடெற் உத்தியோகத்தரிகள் 19 பேரும், 14 ஆவதுஉட்கொள்ளலின் கீழ் தொண்டர் மகளீர் கெடெற் உத்தியோகத்தரிகள் 10 பேரும் இந்த கெடெற் அதிகாரிகள் பயிற்சி நிறைவு நிகழ்வில் இணைந்திருந்தனர்.

இலங்கையின் சுதந்திரம் தேசிய ஒருமைப்பாடு, இறைமை, ஒற்றுமை என்பவற்றிற்காக தம் உயிர் நீத்த சகல படைவீரர்களை ஞாபகமடுத்தும் நிகழ்வு இராணுவ தளபதியின் தலைமையில் இடம்பெற்றது.

கெடெற் அதிகாரிகள்9.00 மணியளவில் வண்ணமயமான ஆடை அணிகலன்களுடன் அணிவகுப்பை மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கு வழங்கினர். அத்துடன் இந்த அணிவகுப்பில் இராணுவ தளபதி மற்றும் இராணுவ எகடமியின் கட்டளை தளபதியும் இணைந்திருந்தார்.

சிறந்த கெடெற் அதிகாரிகளுக்கு பிரதம விருந்தினரால் வாள் மற்றும் கொமிஷன் உரிமைகள் வழங்கப்பட்டன.

கெடெற் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பிற்கு மேஜர் எச்.ஆர்.ஏ.ஜே.கே.கே பஸ்நாயக , கெப்டன் ஆர்.டப்ள்யூ.எம்.என்.ஆர்.என்.டீ சமரகோன், ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் டப்ளயூ.பீ.என்.எஸ் மெண்டிஸ் அவர்களின் பயிற்சிவிப்பின் கீழ் இந்த அதிகாரிகளின் தலைமையில் அணிவகுப்புகள் இடம்பெற்றன.

84 உட்கொள்ளலின் கீழ் மகளீர் கெடெற் உத்தியோகத்தரியான எஸ்.டீ.பி.டீ பிரேமரத்னவின் கீழ் பிளட்டுன் அதிகாரியாக ஐ.ஏ.கே இந்துரகே 15 ஆவது உட்கொள்ளலின் கீழ் மகளீர் கெடெற் உத்தியோகத்தரியானஎம்.ஜி.எல். குணரத்ன அவர்களும் சிறந்த திறமைகளை இந்த பயிற்சியின் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் அனைத்து பிரதேசங்களில் கடமை புரிவதற்காக‘ரட ரகின ஜாதி’ எனும் தொணிப்பொருளின் கீழ் தங்களது பிள்ளைகளை நாட்டிற்கு இந்த பெற்றோர்கள் தியாகம் செய்துள்ளனர்.

தியதலாவையிலுள்ள இராணுவ எகடமிகெடெற் அதிகாரிகளின் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றும்போது ‘இலங்கை இராணுவம் யுத்தத்துடன் மட்டும் மட்டுப் பட்டிருக்கமால் நாட்டின் அபிவிருத்திக்காக அவர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பு பாராட்டதக்கதாகும். தேசிய பாதுகாப்பு அனைத்து நாடுகளையும் போன்று இலங்கைக்கும் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகும். அத்துடன் நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின்போதும் இலங்கை இராணுவம் அளப்பெரிய சேவையை வழங்கியுள்ளது. மேலும் இராணுவம் அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ளும் ஆற்றலை கொண்டுள்ளனர் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து இந்த கெடெற் அதிகாரிகள் ஜனாதிபதியுடன் குழு புகைப்படத்தில் இணைந்து கொண்டனர்.

பின்பு கெடெற் அதிகாரிகளினால் இராணுவ எகடமி உடற்பயிற்சி சாலையில் நடாத்திய உடற்பயிற்சி கண்காட்சிகளை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தந்துகண்காட்சிகளை பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தார்.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் இராணுவ எகடமியில் உள்ள பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாலினி வைத்தியாரத்ன மற்றும் இராணுவசேவா வனிதா பிரிவின் தலைவிதிருமதி சந்திரிக்கா சேனாநாயக்க அவர்களும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

latest Running Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov