Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2018 11:32:21 Hours

‘'ஒரு திருப்தியான இராணுவ வாழ்க்கை' எனும் தலைப்பின் புத்தகம் உத்தியோகபூர்வமாக இராணுவ தளபதிக்கு

இராணுவத் தடுப்பு சீர்திருத்தம் மற்றும் மன நல சேவைகளின் பிரதி பணிப்பாளர் மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் மன நல வைத்தியரான கேர்ணல் ஆர்.எம்.எம் மொணராகல அவர்களினால் எழுதப்பட்ட 'ஒரு திருப்தியான இராணுவ வாழ்க்கை' எனும் தலைப்பின் புத்தகம் உத்தியோகபூர்வமாக இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களுக்கு இராணுவத் தலைமையகத்தில் கடந்த (24) ஆம் திகதி வழங்கப்பட்டது.

இந்த புத்தகத்தில் விவாகரத்து மற்றும் திருமணமான வாழ்க்கை, "'ஆரோக்கியமான பழக்கவழக்கம்' 'உணவு பழக்கம்' 'சமூக வாழ்க்கை' 'ஒத்துழைப்பு' ' மற்றும் நேர்மை' 'இணக்கத்திற்கான கடமை' 'பாலியல் நடத்தை மற்றும் நடைமுறை சார்ந்த புரிந்துணர்வு' சிங்கள மொழியில் புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தகம் கொழும்பு இராணுவ வைத்தியசாலையினரால் வடிவமைக்கப்பட்டு வைத்தியர் பிரிகேடியர் ஏ.எஸ்.எம் விஜேவர்தன அவர்களின் தலைமையில் ‘ஆரோக்கியமான இராணுவம் -ஆரோக்கியமானது’எனும் தலைப்பில் இந்த புத்தகம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரதி பதவி நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் தலைமையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ வீரர்களுக்கான தொற்று நோய்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினென்ட் கேர்ணல் மகேஷ் சேனநாயக அவர்களினால் இந்த புத்தகம் எழுதுதிய வைத்தியர் கேர்ணல் ஆர்.எம்.எம் மொணராகல அவர்களுக்கு பாரட்டப்பட்டதோடு புத்தகத்தின் அதிகப்படியான பிரதிகள் அச்சிடப்பட்டு இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதி பதவி நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து மற்றும் வைத்தியர் பிரிகேடியர் ஏ.எஸ்.எம் விஜேவர்தன மற்றும் இராணுவ தளபதியின் உதவி அதிகாரயான கேர்ணல் உதயகுமார அவர்களும் கலந்து கொண்டார்கள்.

latest Running Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE