Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th July 2017 22:27:35 Hours

ஹசலக காமினியின் 26ஆவது ஆண்டு விழா ஆனையிறவில்

ஆனையிறவு இராணுவ முகாமில் பயங்கரவாதிகளிடம் இருந்து தமது சகோதர வீரர்களது உயிரை காப்பாற்றுவதற்காக 1991 ஜூலை மாதம் 14ஆம் திகதி சுயமாக முன் வந்து தனது உயிரை தியாகம் செய்த 6ஆவது இலங்கை சிங்க படையணியைச் சேர்ந்த கோப்ரல் காமினி குலரத்ன வீரரின் 26ஆவது ஆண்டு விழா வெள்ளிக் கிழமை (14)ஆம் திகதி ஆனையிறவு ஹசலக காமினியின் நினைவு துாபி வளாகத்தினுள் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 66 மற்றும் 662ஆவது படைத் தலைமையகத்தினால் பௌத்தசமய மற்றும்; தானம் வழங்கும்; நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

66ஆவது படைத் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பெடிவலான மற்றும் 662 படைத் தலைமையகத்தின் கேர்ணல் ரொஹான் பொன்னம்பெரும அவர்களது அழைப்பில் இந்த நிகழ்விற்கு காலஞ்சென்ற கோப்ரல் குலரத்னவின் தாயாராகிய திருமதி எஸ்.ஜி ஜூலியட் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்து கொண்டனர்.

சமய அணுஸ்டானங்களுக்கு முன்பதாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 66 படைப் பிரிவினால்; ஒழுங்கு செய்து ஹசலக காமினியின் நினைவு துாபிக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன் 66ஆவது படைத் தளபதி , 662ஆவது கட்டளை அதிகாரி, படை வீரர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் இணைந்து விளக்குகளை ஏற்றி கௌரவ அஞ்சலியை செலுத்தினர்.

1991 ஜூலை மாதம் 14ஆம் திகதி எல்டிடிஈ யினரால் வெடி மருந்துகள் நிரப்பிய புல்டோசர் இயந்திரத்தின் மூலம் இராணுவ முகாமிற்கு பாரிய தாக்குதலை மேற்கொள்ள வரும் சந்தர்ப்பத்தில் லான்ஸ் கோப்ரல் காமினி தனது உயிரை பொருட்படுத்தாமல் தனது உயிரை அர்ப்பணித்தார். இந்த சேவையை பாராட்டும் பொருட்டு இவருக்கு ‘பரம வீர விபூஷண’ பதக்கம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு யாழ்ப்பாண குடாநாட்டின் நிர்வாக கடமை நிமித்தம் ஆனையிறவு இராணுவ முகாம் மிக முக்கியமான முகாமாக விளங்கியது. 600 பேரைக் கொண்டிருந்த இந்த இராணுவ முகாமிற்கு தாக்குதல் புரிவதற்காக 5000 பயங்கரவாதியினர் வந்திருந்தனர்.

புலிப் பயங்கரவாதிகளினால் தந்திர உபாய முறைகளை பயண்படுத்தி வெடிமருந்துகள்; நிரப்பப்பட்ட புல்டோசர் ஒன்றை முகாமினுள் உட்புகுத்தி பாரிய அழிவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முகாமை நோக்கி வரும்போது இந்த புல்டோசருக்கு பின்னால் ஓடிச்சென்று கைக்குண்டு தாக்குதல் புரிந்து அந்த பாரிய தாக்குதலை முறியடித்து பின்பு தனது உயிரை தியாகம் செய்தார். பின்பு இவரது சடலம் சகோதர படையினரால் மீட்கப்பட்டது.

கோப்ரல் குலரத்ன 1966ஆம் ஆண்டு பிறந்தார். குடும்பத்தின் இரண்டாவது அங்கத்தவர் ஆவார். இவரிற்கு சகோதரர் இருவரும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவர் ஹசலக ரணசிங்க பிரேமதாஸ மத்திய மஹா வித்தியாலயத்தில் கல்வியை தொடர்ந்தார். பின்பு 1987ஆம் ஆண்டு 6ஆவது இலங்கை சிங்க படையணிக்கு இணைந்தார். ஆனையிறவில் இவரது நினைவு துாபி மற்றும் சேதத்துக்கு உள்ளான புல்டோசர் இயந்திரத்தின் பாகங்களும் தற்பொழுதும் காணப்படுகின்றது.

bridge media | Nike