Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2018 18:48:50 Hours

வேப்பமலை தேவாலய திருவிழாவிற்கு இராணுவத்தினரது உதவிகள்

முள்ளிவாய்க்கால் (மேற்கு) கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் இருக்கும் வேப்பமலை கிறிஸ்தவ தேவாலய திருவிழாவிற்கு 68, 681 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 14 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் பூரண ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திருவிழா ஓகஸ்ட் 25- 26 ஆம் திகதிகளில் இடம்பெற்றன. அச் சமயத்தில் விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த படையினர் கூடாரங்கள் அமைத்து, கொடிகளை நாட்டி பக்தர்களுக்கு தண்ணீர் பந்தலும் அமைத்து தமது பாரிய உதவிகளை வழங்கினர்.

இந்த பணிகள் 681 ஆவது படைத் தலைமையகத்தின் வழிக்காட்டலின் கீழ் 14 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை தளபதியின் தலைமையில் இடம்பெற்றன. Sports brands | Jordan Ανδρικά • Summer SALE έως -50%