Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2018 10:00:10 Hours

வீரம்புகெதர எனும் பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்தத்தில் உதவிபுரிந்த இராணுவத்தினர்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 143ஆவது படைப் பிரிவின் 1ஆவது இலங்கை தேசியப் பாதுகாப்பு படையினரால் குருணகல் வீரம்புகெதர எனும் பிரிவிற்குற்பட்ட உடுகம கதுருவெல எனும் பிரதேசத்தில் கடந்த புதன் கிழமை (15) காலை வேளை ஏற்பட்ட சிறிய சூராவளி அனர்த்தத்தினால் பாதிற்புற்ற இப் பிரதேசத்திற்கு வருகை தந்த படையினர் தமது உதவிகளை வழங்கி வைத்தனர்.

அந்த வகையில் இச் சூராவளியினால் 292 நபர்களுக்கு சொந்தமான 96 வீடுகள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.

இவ் அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற 03அதிகாரிகள் உள்ளடங்களான 20 இராணுவப் படையினர் தம்மால் இயன்ற உதவிகளை வழங்கினர்.

மேலும் இவ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரியும் நோக்கில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே அவர்கள் அதற்கான ஆலோசனைகளை வழங்கியதுடன் 143ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான கேர்ணல் டீ எம் பி டீ திஸாநாயக்க அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். jordan release date | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf