Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2018 15:37:27 Hours

வீதி விபத்து தொடர்பன ஒத்துடைப்பை பொலிசிற்கு வழங்கிய படைவீரர்

தெமட்டகொடை பொலிசின் வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பிரிவினரால் இராணுவ பயிற்றுவிப்பு பணியகத்திற்கு மொவுண் மேரி சந்தியில் இடம் பெற்ற ஓர் வீதி அனர்தத்தில் இராணுவ தொண்டர்ப் படையணியைச் சேர்ந்த படைவீரர் ஒருவர் விபத்திற்குள்ளான நபரை காப்பாற்றியதுடன் இவ்விபத்தை ஏற்படுத்திய மோட்டார் வாகன ஓட்டுநர் தொடர்பான விபரத்தையம் பொலிசிற்கு வழங்கி ஒத்துழைத்தமைக்கான பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

அந்த வகையில் இராணுவ பயிற்றுவிப்பு பணியகத்தில் சேவையாற்றும் 11ஆவது இலங்கை சமிக்ஞைப் படையணியைச் (SLSC) சேர்ந்த லான்ஸ் கோப்பிரல் எம் ஏ என் பி மனதுங்க எனும் படை வீரர் 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி காலை 4.15 மணியளவில் வீதியை கடக்க முற்பட்ட தேங்காய் விற்பனையாளரது தள்ளு வண்டியை திடீரென நிறுத்தாமல் வேகமாக வந்த மோட்டார் வண்டியானது மோதுன்டு சென்றமையினால் தள்ளு வண்டி நபர் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இச் சம்பவத்தில் நேரில் கண்ட சாட்டியார இராணுவ வீரர் உடனடியாக அந் நபரை; வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மோட்டார் வண்டி ஓடுநரை இடைவிடாது தமது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று அவ் வாகனத்தின் தட்டிலக்கத்தை குறித்துள்ளார். அதன் பின்னர் அவ் வாகனத் தகட்டிலக்கத்தை ஒருகொடவத்தை சந்தியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் இப் படை வீரரான லான்ஸ் கோப்பிரல் மனதுங்க விரைவாக வகொழும்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு விரைந்து சென்று காயமடைந்த நபரை கண்ட வேளை அவர் விபத்திற்குள்ளான தெமட்ட கொடைப் பிரதேச ஸ்தலத்திலேயே இறந்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் தெமட்ட கொடைப் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த படை வீரர் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் வாகன தகட்டிலக்கதையூம் வழங்கி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

மேலும் இவ் இராணுவ வீரரால் கிடைக்கப் பெற்ற தகவலிற்கமைவாக தெமட்டகொடைப் பொலிஸ் பிரிவினர் விரைவாக மோட்டார் வாகன சாரதியை கைதுசெய்யூம் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இச் சம்பவத்தின் நிமித்தம் முழு ஒத்துழைப்பையும் வழங்கிய இராணுவ படை வீரருக்கு பொலிஸ் திணைக்களத்தினால் பாராட்டுக் கடிதமும் வழங்கப்பட்டது.

இக் கடிதத்தில் இச் சம்பவத்தின் மூலம் இராணுவப் படைவீரரான இவரது செயற்பாடு இராணுவத்திற்கும் சிவில் சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளதாகவூம் இவரது இத் தனிப்பட்ட செயற்பாட்டின் மூலம் குறித்த சந்தேக நபரை அடையாளம் கண்டு கொள்ள வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத் தக்கது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இக் கடிதம் இராணுவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Running sports | Autres