Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2018 07:58:47 Hours

விஷேட படையணியின் ஆளுருவி நடவடிக்கை பயிற்சி நிறைவு விழா

மாதுறுஓயா விஷேட படையணியின் பயிற்சி பாடசாலையில் ஆறு மாதங்கள் இடம்பெற்ற ஆளுருவி நடவடிக்கை (LRP) இலக்கம் - 19பயிற்சியை நிறைவு செய்த இரண்டு அதிகாரிகள் மற்றும் 34 படையினர்களுக்கு பயிற்சி சின்னங்கள் அளிக்கும் நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் வவுனியா விஷேட படையணி தலைமையகத்தில் (24) ஆம் திகதி சனிக் கிழமை மாலை இடம்பெற்றன.

விஷேட படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா மற்றும் 3 ஆவது விஷேட படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜயந்த பண்டார அவர்களினால் இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதி வரவேற்கப்பட்டார்.

இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ மரியாதையுடன் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு 3 ஆவது விஷேட படையணியின் கட்டளை அதிகாரியினால் இந் நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

பின்பு பயிற்சியை நிறைவு செய்த இராணுவத்தினருக்கு இராணுவ தளபதியினால் பயிற்சி நிறைவு சின்னங்கள் அணிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இப் பயிற்சியில் சிறந்த முறையில் திறமையை வெளிக்காட்டிய வீரர்களுக்கும் பதக்கங்கள் இராணுவ தளபதியினால் வழங்கப்பட்டன. பின்பு பயிற்சியை நிறைவு செய்த இராணுவத்தினர் இராணுவ தளபதியுடன் குழுப் புகைப்படத்தில் இணைந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து 3 ஆவது விஷேட படையணி தலைமையகத்தில் நிர்மானிக்கப்பட்டிருந்த விடுதி புதிய கட்டிடமும் இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது. பின்பு பயிற்சியை நிறைவு செய்த இராணுவத்தினருடன் பயிற்சிகள் தொடர்பான விடயங்களை இராணுவ தளபதி உறையாடினார்.

2017 ஆம் ஆண்டு உடற்பயிற்சி போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிக்காட்டிய லான்ஸ் கோப்ரல் பீ.சி கசுன் அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதி பாராட்டினார்.

இவர் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஓட்டப் போட்டிகள், சிறந்த உடற்பயிற்சியாளர், சிறந்த சூட்டுவிப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Nike air jordan Sneakers | adidas Yeezy Boost 350