Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2018 10:01:49 Hours

விஜயபாகு காலாட் படையின் கோப்ரல் சரித் குலதிலக அவர்களது ‘சிகினயக் சே’ இசைத்தட்டு இராணுவ தளபதிக்கு கையளிப்பு

‘ரணவிரு ரியல் ஸ்டார்’ இசை நிகழ்ச்சிகளில் தமது பாடல்களை பாடி தமது திறமைகளை வெளிக்காட்டிய இராணுவ வீரன் தற்பொழுது அங்கவீனமுற்று அநுராதபுர ‘அபிமன்சல’ நிலையத்தில் இருக்கின்றார். இவர் 5 ஆவது விஜயபாகு காலாட் படையைச் சேர்ந்தவர்.

இவரின் இரண்டாவது இசைத்தட்டு இராணுவ தளபதிக்கு (25) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாதுகாப்பு சேவை கல்லூரியில் கையளிக்கப்பட்டது.

இவருக்கு இராணுவ தளபதி மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புடன் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டன.

இந்த படையினரது அழைப்பையேற்று இந்த நிகழ்விற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தனர்.

இந்த நிகழ்வில் பத்திரிகை ஆசிரியரான் சுமித்ரா கொடகே அவர்களினால் நன்றியுறை நிகழ்த்தப்பட்டன.

இந்த நிகழ்வில் காலஞ் சென்ற முன்னாள் பாடகரான பண்டிதர் அமரதேவ அவர்களின் பாரியரான விமலா அமரதேவ வருகை தந்தார். நிகழ்வில் மங்கள விளக்கேற்றுகள் எற்றி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்து இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இராணுவ வீரன் முகமாலை மனிதாபிமான நடவடிக்கைகளின் போது முழுமையான அங்கவீன நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இவர் ரணவிரு ரியல் ஸ்டார் போட்டிகளில் கலந்து 12 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

இந்த பாடல்களில் சம்புது பண பத, புதுன் வடினா சே, போ மலுவ, பன்சல பள்ளிய, செதா கணதுர, சிகினயக் சே, லந்தே பிபுண போவிடியா, நீல் வரல, நுபட கிதயி, ஒய பபுவட, ருவட நுபே, சுது பிச்ச மலட, கங்க திய சினாசிசி, ரிதென்ன தரம் சித, தனிவ ஆ கமன, மற்றும் ‘கீத புரா எனும் பாடல்கள் இந்ர இசைத்தட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் இந் நிகழ்விற்கு மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இசைக் கலைஞர்கள் , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

Authentic Sneakers | Nike