Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2018 20:08:54 Hours

வன்னியில் சேவையாற்றும் இராணுவப் படையினரின் குடும்பங்களுக்கான 3ஆம் முறை யாத்திரைப் பயணம்

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் அதிகார பூர்வமற்ற பதவி தரங்கள் அதிகாரிகள் படையினர் மற்றும் சிவில் ஊழியர்கள் போன்றோரின் 150 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 3ஆம் முறையாக இவ் யாத்திரைகள் மற்றும் சுற்றுலாப் பயணங்கள் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இச் சமூக நலத்திட்டமானது வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் ஏற்பாட்டில் அனுராதபுர மிஹிந்தலை தந்திரிமலை இ மடு மன்னார் மற்றும் வவுனியா போன்ற புனித ஸ்தலங்கள் அமைந்துள்ள இடங்களை பார்வையிடும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டது. இதன் போது இவர்களுக்கான உணவுவகைகள் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்கள் போன்றனவும் வழங்கப்பட்டது.

இச் சுற்றுலாப் பயணமானது பலவாறான மதங்களிடையே நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கில் இடம் பெற்றதுடன் இன்னிசை நிகழ்சிகளும் இராப்போசன விருந்துபசாரங்களும் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகளில் கலந்து கொண்ட வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் இந் நிகழ்சிகளில் பாடல்கள் மற்றும் பலவாறான திறமைகளை வெளிக்காட்டிய சிறார்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்ததுடன் இச் சிறார்களுக்கு விளையாட்டுப் பொருட்களும் பாடசாலை உபகரணங்களும் பரிசாக வழங்கப்பட்டன. jordan Sneakers | Nike