Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2018 15:45:14 Hours

வன்னி பாதுகாப்பு படையினரால் தீபாவளிப் பண்டிகை நிகழ்வுகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் மற்றும் வவூணியா தமிழ் சமூகத்தினருடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்து மத தீபாவளிப் பண்டிகை நிகழ்வூகள் வவுணியாவில் உள்ள ஸ்ரீ கந்தசாமி கோவிலில் கடந்த செவ்வாய்க் கிழமை (06) இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வுகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் ஒருங்கிணைப்பில் 56ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் பிரபாத் தெதடன்பிட்டிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் இக் கோவிலில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. மேலும் இந் நிகழ்வுகள் நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் கலந்து கொண்டதுடன் வவுணியா பிரதேச செயலாளரான திரு மொகமட் ஹனிபா அவர்களும் இப் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வூகளில் 21 மற்றும் 61ஆவது படைத் தலைமையகங்களின் தளபதியான பிரிகேடியர் குமார் ஜயபதிரன மற்றும் பிரிகேடியர் கே டீ சி ஜி ஜெ திலகரத்தின வவூணியா பிரதேச செயலாளரான திரு டி திரேஷ் குமார் வட மத்திய கடற்படைத் தளபதியான கப்டன் அஷோக் விஜேசிறிவர்தன வவூணியா பொலிஸ் அத்தியட்சகர் திரு ஷாந்த தென்னகோன் மேலும் 56ஆவது படைத் தலைமையக தளபதி மற்றும் வவூணியா இந்து கோவில் பக்தர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் தீபாவளிப் பண்டிகையானது இருளில் இருந்து வெளிச்சத்தை கொண்டுவருதல் எனும் எண்ணக்கருவைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் தீபாவளிப் பண்டிகையானது கடவுளை எண்ணி வழிபடும் பண்டிகையாக இந்துக்கள் வழிபடுகின்றனர். latest Running | Mens Flynit Trainers