Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd March 2018 13:49:45 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் முன்பள்ளி அமைப்பதற்கான அத்திவாரம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் ஹேமாஸ் அவுட்ரீச் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் அனுராதபுரம், வவுனியா போன்ற பிரதேசங்களில் முன்பள்ளிகள் அமைப்பதற்கான அத்திவார பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிரதான கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு 'பியவர' திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விவகார அமைச்சுடன் இணைந்து இலங்கையில் குழந்தை பருவகால குழந்தைகளுக்கான நடமாடும் ஸ்தாபனங்களை நிறுவுவதன் மூலம் இலங்கையில் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு கவனம் செலுத்தி வருகின்றது. தற்பொழுது 44 பாலர் பாடசாலைகளில் 3500 க்கும் அதிகமான பிள்ளைகள் தங்கள் பாலர் கல்வியைப் மேற்கொள்கின்றனர்.

'பியவர' திட்டத்தின் தொடர்ச்சியாக, ஹமாஸ் அவுட்ரீச் அறக்கட்டளை மூன்று இனக்குழுக்கள் உள்ளடக்கிய, மராடா மடுவா மற்றும் திவய ஊடா பெந்தா வீவாவின் இரண்டு சிறப்பம்சங்களைக் கொண்ட பொதுமக்களின் சிரமங்களைத் அறிந்து கொண்டதன் பின்னர் இன்னும் இரண்டு பாடசாலைகளுக்கு நிதி வழங்க முன்வந்துள்ளது.

திங்கட்கிழமை (19) ஆம் திகதி , மராதா மடுவாவில் 'ரன் தரு' பாலர் பாடசாலை மற்றும் 'திவ்ய ஊடா பெந்தா வேவா' பாடசாலைகளில் 'ஏகமுத்து' பாடசாலைகளை நிர்மாணிப்பதற்காக அத்திவார பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

'பியவர' திட்டம் சிறுவயது வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகு முறையுடன் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் நல்லிணக்க நோக்கத்துடன் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக இரண்டு முன் பள்ளியை நிர்மானிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி நிறுவனத்தின் தலைவர், ஹேமாஸ் அவுட்ரீச் அறக்கட்டளை பணிப்பாளர் திரு.அபாஸ் எஸ்பூபலி மற்றும், தகவல் தொடர்பு மற்றும் நிதானமான அபிவிருத்தி பொது முகாமையாளர், திருமதி ஷிமிமி மசகொரல்லா ஆகியோர் அடிக்கல்லை நாட்டினார்கள்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் வருகை தந்தார். அத்துடன் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

இந்த பணிகள் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் மனோஜ் லமாஹேவா மற்றும் கேர்ணல் சுதத் ரத்னாயக அவர்களின் பூரன ஒத்துழைப்பு இந்த நிகழ்வு இடம்பெற்றன.

best Running shoes | Air Jordan