Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2017 10:34:18 Hours

லெபனான் இடைக் காலப் படையில் பங்கேற்ற இலங்கை இணுவத்தினருக்கான விருது

ஐக்கிய நாடுகளின் லெபனான் இடைக் காலப் படையணியின் பயிற்ச்சிகளில் பங்கேற்ற இலங்கைப் படையினருக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட் கிழமை (9) இப் படையணியின் ( FHQSU) நக்கியூரா எனும் பிரதேசத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் லெபனான் இடைக் காலப் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் மிச்சேல் பேர்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழகளையும் வழங்கியதுன் லெபனானிலுள்ள இலங்கைத் துாதரகத்தின் துாதுவரான திரு எச் எம் ஜி ஆர் ஆர் கே விஜேரத்தின மென்டிஸ் அவர்கள் கலந்து கொண்டு இலங்கை அமைதிகாப்பாளர்களுக்கான பதங்கங்களை வழங்கினார்.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் பிரதிப் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இவரை 11ஆவது இலங்கை பயிற்றுவிப்பின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சி ஏ ராஜபக்ஷ அவர்கள் வரவேற்றார்.

இந் நிகழ்வின் இறுதியில் மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் பிரதம அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

இதன் போது இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி 10 இராணுவ அதிகாரிகளும் 140 படை வீரர்களும் கலந்து கொண்டு தமக்கான வெற்றிப் பதக்கங்களை சூடிக் கொண்டனர்.

இவ்வாறான அமைதிகாக்கும் படைப் பயிற்சிகள் இலங்கை இராணுவத்தினரால் 2010ஆம் ஆண்டு முதல் வரவேற்கப்படுவதோடு ஐக்கிய நாடுகளின் லெபனான் இடைக் காலப் படையணியினரின் (UNIFIL) வேண்டுகோளிற்கினங்க 10 இராணுவத்தினர் லெபனாலில் சேவையாற்றிய வண்ணம் உள்ளனர்.

இந் நிகழ்வில் இராணுவத் தலைமையகத்தின் கடமைப் பொறுப்பதிகாரியான பிரிகேடியர் எஸ் பி செனெவிரத்தின , இராணுவ ஆயத மற்றும் வெடிபொருட்கள் தலைமையகத்தின் (CAAD) தளபதியான கேர்ணல் டபிள்யூ ஏ பி எம் விஜேசிங்க மற்றும் லெபனானின் உயர் அதிகாரிகள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

Best Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ