Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2018 12:01:49 Hours

ரையிட் அமசோன் - 2018 போட்டியில் கலந்து கொண்ட இராணுவ வீராங்கனைகள்

உலகலாவிய ரீதியில் பெண்களுக்கு சவாலாக அமையூம் பிரபல்யமான ரையிட் அமசோன் - 2018 போட்டி நிகழ்வானது 18ஆவது இலங்கையின் கிழக்கு மாகாண பாசிக்குடா தொப்பிகள மற்றும் கல்குடா போன்ற பிரதேசங்களில் சைக்கிட் ஓட்டம் படகோட்டம் மற்றும் ஓட்டப் போட்டிகள் போன்றன ஒக்டோபர் மாதம் 11-18ஆம் திகதி வரை இடம் பெற்றது. இதன் போது இலங்கை இராணுவ மகளிர் (தொண்டர்) படையணியின் மூன்று வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இப் போட்டிகளில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையம் தமது ஒருங்கிணைப்பை வழங்கியிருந்ததுடன் இப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றது. இதன் போது 48கிமி சைக்கிள் ஓட்டம் 23கிமி ஓட்டம் மற்றும் 9கிமி நீச்சல் போன்ற போட்டிகள் கிரான் தொப்பிகல மற்றும் கல்குடா கடற்கரையில் (232 படைப் பிரிவூ) 232ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ரொஷான் ஜயமான்ன அவர்களின் கண்காணிப்பில் 15 - 17 மற்றும் 18ஆம் திகதிகளில் ஒக்டோபர் மாதம் 2018 இடம் பெற்றது

இலங்கையில் இடம் பெற்ற ரையிட் அமசோன் எனும் போட்டியில் 25 நாடுகளிற்கும் மேற்பட்ட நாடுகளின் 270 போட்டியாளர்கள் கலந்து கொண்டு. தமது திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.

இப் போட்டிகளில் இராணுவத்தின் இலங்கை இராணுவ மகளிர் (தொண்டர்) படையணியின் மூன்று வீராங்கனைகளான சார்ஜன்ட் எஸ் எல் கமகே கோப்ரல் டபிள்யூ ஏ நில்மினி மற்றும் சாதாரண வீராங்களை ஜெ எம் ஜி பி ருவன்மலி போன்றனர் கலந்து கொண்டனர்.

இச் சர்வதேச போட்டிகள் தம்புள்ளையில் 2009ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இடம் பெற்றது. மேலும் இப் போட்டிகள் கென்யா மராட்டி மலேசியா கொலொம்பியா மற்றும் கலிபோனியா போன்ற நாடுகளின் சிவில் இணைப்புகளின் அனுசரனையோடும் இடம் பெற்றது. Authentic Sneakers | Autres