Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th February 2018 11:54:34 Hours

யாழ்ப்பாணத்தில் முன்னாள் ஸ்டாப் சாஜன் துறைரத்னம் அவர்களது இறுதி சடங்குகள் இராணுவ மரியாதையுடன்

இலங்கை இராணுவ பொறியியலாளர்படையணியின் முன்னாள் ஓய்வுபெற்ற ஸ்டாப் சாஜன் துறைரத்னம் அவர்கள் 22 ஆவது வருட இராணுவ சேவையை ஆற்றி ஓய்வு பெற்றிருந்தார். இவரது இறுதி சடங்குகள் இராணுவ மரியாதையுடன் கடந்த பெப்ரவரி மாதம் புதன்கிழமை (7) ஆம் திகதி யாழ் வல்லாலை பொது மையானத்தில் இராணுவ பொறியியலாளர் படையணியின் படைத்தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள போதனை வைத்தியசாலையில் இவர் பெப்ரவாரி மாதம்3 ஆம் திகதி காலமானார். இவர் சிலோன் இராணுவத்தில் 1957 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் திகதி 1ஆவது இராணுவ பொறியியலாளர் படையணியில் இணைந்து தனது 22 ஆவது வருட சேவையை நிறைவு செய்து 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இராணுவ பொறியியலாளர் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் துறைரத்னம் அவர்களது மரண இறுதி கிரிகைகளுக்கு யாழ் வள்ளாலையில் உள்ள பொது மையானத்திற்கு வருகை தந்துஇராணுவ மரியாதையை செலுத்தி குடும்ப உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.

துறைரத்னம் அவர்களது இறுதி மரணச் சடங்கிற்கு 10 ஆவது இராணுவ பொறியியலாளர் படையணியின் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவரது சடலம் ஊர்வலமாக பொது மையானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

ஸ்டாப் சாஜன் துறைரத்னம் அவரது பூதவுடல் தேசியக் கொடியால் மூடப்பட்டு அடக்கத்திற்காக எடுத்து செல்லப்பட்டது.

உத்தியோகபூர்வ விசேட பிரிவு ஆணை 1 இவரது சேவையை பாராட்டும் பொருட்டு இராணுவத்தினரால் காலஞ் சென்ற துறைரத்னத்திற்கு வழங்கப்பட்டு இவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

பின்பு யாழ் பாதுகாப்பு படைத் தளபதியினால் காலஞ்சென்ற ஸ்டாப் சாஜன் துரைரத்னம் அவர்களது குடும்பத்தினருக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.

இராணுவ தளபதி லெப்டின்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக யாழ் பாதுகாப்பு படைத் தளபதியாக கடமையாற்றிய போது யாழ்ப்பாணத்தில் முன்னாள் இராணுவ சங்கத்தை நிறுவினார். அதன் பிரகாரம் இந்த மரணச் சடங்குகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

buy shoes | Nike for Men