Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th September 2017 14:56:14 Hours

யாழ்ப்பாண மக்களின் தேவை கருதி சுகாதாரப் பிரிவுகள் திறந்து வைப்பு

யாழ்ப்பாண மக்களிற்கு சேவை செய்யும் நோக்கில் இராணுவத்தினரால் பலவாறான சுகாதார சேவைகளுக்கான வெளிநோயாளர்ப் பிரிவு மற்றும் பிராந்தி மருந்து அலுவலகம் போன்றன சுகாதா அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் வட்டுக்கோட்டை மற்றும் கையிட் போன்ற பிரதேசங்களிலும் யாழ்ப்பாண மரதங்கேணி வைத்திய அதிகாரிகளின் காரியாலய அலுவலகத்திலும் இந் நிகழ்வுகள் இடம் பெற்றது.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் 2016ஆம் ஆண்டு யாழ்பாணப் படைத் தலைமையகத்தின் பாதுகாப்பு படைத் தளபதியாக முன்னர் சேவையாற்றிய காலத்தில் நோயாளர்களின் தேவை கருதி பாரிய அளவிலான இரு வெளிநோயர்ப் பிரிவு மற்றும் பிராந்திய மருத்துவ அலுவலக கட்டுமானப் பணிகள் போன்றன இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரின் ஒத்துழைப்போடு இக் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதன் பின்னர் இக் கட்டுமானப் பணிகள் இராணுவத் தளபதியவர்களின் ஆலோசனைக் கிணங்க வடக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இக் கட்டுமானப் பணிகள் இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இக் கட்டுமானப் பணிகளுக்கான அனுசரனையை குளோபல் பண்ட்ஸ் பையிட் எயிட்ஸ் (Global Fund to Fight AIDS), ஜெனிவா மற்றும் சுவிஸ்லாந்தின் Tuberculosis and Malaria (GFATM) போன்ற அமைப்புகள் வழங்கி வைத்தது.

அத்துடன் இவ் அமைப்புகளின் அனுசரனையில் சுமார் 28.03 மில்லியன் ருபா செலவில் வட்டுக்கோட்டை வெளிநோயர் பிரிவும் . கையிட் வெளிநோயர் பிரிவு சுமார் 28.9 மில்லியன் ருபா செலவிலும் மற்றும் சுமார் 30.3 மில்லியன் ருபா செலவில் மரதங்கேணிப் பிரதேசத்தித்தின் பிராந்திய மருத்துவ அலுவலகர் அலுவலகம் போன்றன அமையப்பெற்றன.

மேலும் பலாலி விமான நிலையத்திற்கு வருகை தந்த அமைச்சரவர்களை யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் வரவேற்றார்.

அந்த வகையில் இந் நிகழ்விற்கு வருகை தந்த சுகாதாரா அமைச்சரை வடக்கு ஆளுனர் வரவேற்றதோடு வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தளபதியான தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்றௌரும் பங்கேற்றனர்.

மேலும் சுகாதார அமைச்சரின் தலைமையில் புதிதாக அமையப் பெற்ற வெளிநோயாளர் பிரிவிற்கு முதலாவதாக நோயாளர் அனுமதிக்கப்பட்டார்.

அத்துடன் இந் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சரவர்கள் இத் திட்டத்தை நிகரான முறையில் நிறைவு செய்ததற்காக நன்றிகளைத் தெரிவித்தார்.

அந்த வகையில் இந் நிகழ்வில் கௌரவமிக்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின ,வடக்கு மாகான ஆளுனர் ,உயர் பொலிஸ் அதிகாரிகள் ,முப்படையினர் மற்றும் பாரிய அளவிலான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் யாழ்ப்பாண இராணுவத்தினர் சங்கானையில் 5.1 மில்லியன் ருபா பெறுமதியிலான பிராந்திய மருந்துவ அலுவலர் அலுலகம் , 5.4 மில்லியன் ருபா பெறுமதியிலான பிராந்திய மருந்துவ அலுவலர் அலுலகத்தை வெள்ளானை பிரதேசத்திலும் 18.62 மில்லியன் ருபா பெறுமதியிலான வெளிநோயர்ப் பிரிவை கொடிகாகம் பிரதேசங்களில் நிறுவும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

latest Running Sneakers | Zapatillas de running Nike - Mujer