Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2018 22:35:13 Hours

மேற்கு புதிய பாதுகாப்பு தளபதி பதவியேற்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சத்தயபிரிய லியனஹே அவர்கள் கடந்த (02)ஆம் திகதி வெள்ளிக்கிழமை மதவழிபாடுகளின் பின்னர் பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய பாதுகாப்பு படைத் தளபதியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை இப் படைத் தலைமையகத்தினரால் வழங்கப்பட்டது.

அத்துடன் மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனஹேயவர்கள் காரியாலயகத்துக்கு வருகை தந்து பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக மங்கள விளக்கேற்றி அவர் தமது அதிகார பூர்வ கையொப்பத்தையிட்டு கடமைப் பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு படைத் தளபதியவர்களினால் தலைமையகத்தின் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு இடம் பெற்றதை தொடர்ந்து தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

நிகழ்வின் இறுதியில் தமது கடமையை பொறுப்பேற்ற புதிய கட்டளை தளபதியவர்கள் படையினர்களிடம் அவர்களின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினார்.

இதற்கமைவாக மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனஹே அவர்கள் புதிய கட்டளை தளபதியாக பதவியேற்கும் முன் இராணுவ தலைமையகத்தில் யுத்த உபகரண மாஸ்டர் ஜெனரலாக கடமை புரிந்ததுடன்>அவர் பாதுகாப்பு செயளகத்தில் இராணுவ பாதகாப்பு அதிகாரியாக கடமையாற்றினார்.மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வூ பெறுவதால் புதிய பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனஹே அவர்கள் கடமைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Sneakers Store | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth